பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையிலிருந்து நேராக சாய்பாபா கோயில்... மனம் உருகி பிரார்த்தனை செய்த சசிகலா அக்கா மகன் சுதாகரன்..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சுதாகரன், முதல் வேலையாக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

இரு கரங்களை ஏந்தி மனம் உருகி சாய்பாபா சன்னதியில் சுதாகரன் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம் பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம்

இனி வரும் நாட்களில் அரசியல் பக்கம் சுதாகரன் திரும்பிக் கூட பார்க்கமாட்டார் என்றும் அவரது நாட்டமெல்லாம் ஆன்மிகப் பக்கம் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 சொத்து வழக்கு

சொத்து வழக்கு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சுதாகரன், தண்டனைக் காலம் முடிவடைந்ததால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் காணப்படுகிறார். சிகை அலங்காரம் உட்பட எதையுமே கடந்த 4 ஆண்டுகளில் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

சாய்பாபா பக்தர்

சாய்பாபா பக்தர்

சுதாகரனை பொறுத்தவரை அவர் தீவிர சாய்பாபா பக்தர். வம்பு, வழக்குகளில் சிக்கி அமைதியான வாழ்க்கையை தொலைத்து கைது, சிறை, அபராதம், என அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்த சுதாகரன், இனி வரும் நாட்களில் அமைதியை விரும்புவார் எனத் தெரிகிறது. எப்போதும் வெளியிடங்களில் கூலிங் கிளாஸ் சகிதமாக, மிரட்டலான ஆடை அலங்காரத்தோடு தன்னை ஒரு ஜமீன்தாரை போல் காட்சிப்படுத்திக் கொள்ளக் கூடிய சுதாகரன், இப்போது சற்று அதிலிருந்து மாறுபட்டுள்ளார்.

சிறை வாழ்க்கை

சிறை வாழ்க்கை

4 ஆண்டுகால சிறை வாழ்க்கை சுதாகரனுக்கு பல போதனைகளை வழங்கியுள்ளது. ரூ.10 கோடி அபராதம் செலுத்தக் கூட யாரும் முன்வராததால் கூடுதலாக தண்டனைக் காலத்தை அனுபவிக்க நேரிட்டார் சுதாகரன். இதனிடையே பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கருத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கூடுதல் தண்டனைக் காலத்தில் 89 நாட்களை கழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் முகாம்

பெங்களூருவில் முகாம்

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேராக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய சுதாகரன், இன்னும் சென்னை திரும்பவில்லை. இவரை ஒரு காலத்தில் சின்ன எம்.ஜி.ஆர். என்று அவரது ஆதரவாளர்கள் அழைத்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.

English summary
Ttv Sudhakaran went to Sai Baba temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X