பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தற்கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்.. 2 மாதம் முன் பெங்களூரை அதிர வைத்த மரணத்தில் திடுக்!

2 மாதம் முன் பெங்களூரை அதிரவைத்த மரணம் ஒன்றில் பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 மாதம் முன் பெங்களூரை அதிர வைத்த மரணத்தில் திடீர் திருப்பம்

    பெங்களூர்: 2 மாதம் முன் பெங்களூரை அதிரவைத்த மரணம் ஒன்றில் பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    பெங்களூரின் யஷ்வந்த்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கிரண் பாட்டியா என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து பலியானார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த தற்கொலை, உண்மையில் தற்கொலை கிடையாது கொலை என்று போலீசில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. கிரணின் மகன் ஹர்ஷல் பாட்டியா இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    ஹர்ஷல் பாட்டியா தனது அம்மாவின் மரணம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே வாக்குமூலம் அளித்தார் . போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், அம்மா மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் இதே வாக்குமூலம்தான் அளித்தனர்.

    புதிய வாக்குமூலம்

    புதிய வாக்குமூலம்

    இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் 15ம் தேதி போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் வந்த ஹர்ஷல் பாட்டியா, தனக்கு தனது அம்மா கிரணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து தற்கொலை என்று வழக்கை முடித்த போலீஸ் மீண்டும் சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று வழக்கின் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்பின் நேற்று ஹர்ஷல் பாட்டியா புதிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அந்த நாள் சண்டை நடந்தது. பெரிதாக சண்டை போட்டனர். நான் ரூமில் இருந்து வெளியே வந்த போது என் அம்மா மாடியில் இருந்து விழுந்துவிட்டார். என் அப்பாதான் அவரை தள்ளிவிட்டுவிட்டாரோ என்று சந்தேகம் இருக்கிறது என்றுள்ளார்.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இந்த நிலையில், மீண்டும் போலீசார் அந்த குடியிருப்பில் உள்ளவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அதன்படி கரணை அவரது கணவர் கொலை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றுள்ளனர். இந்த நிலையில் இந்த வாக்குமூலங்களை வைத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Twist in Bengaluru Suicide: The son gave a new statement on mother death saying that his father is his killer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X