பெங்களூர் விண்வெளி இன்ஜினியர் அகன்ஷா வழக்கில் ட்விஸ்ட்.. அம்பலமான காதலன்.. யார் அந்த பேராசிரியர்?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்த அகன்ஷா பஞ்சாப் மாநில பக்வாராவில் உள்ள எல்.பி.யூ. பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தார். கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக வேலை செய்து வந்தார். பஞ்சாப்பில் படித்த கல்லூரியில் ஆவணங்களை வாங்குவதற்காக சென்ற அகன்ஷா திடீரென 4வது மாடிக்கு சென்று குதித்தார். இவர் காதல் விவகாரத்தில் இப்படி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா அருகே போலியார் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி சிந்துதேவி. இவர்களது மகள் அகன்ஷாவுக்கு 22 வயது ஆகிறது. இவர் பஞ்சாப் மாநில பக்வாராவில் உள்ள எல்.பி.யூ.பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.

கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி என்ஜினீயராக வேலை செய்து வந்தார். ஜெர்மனியில் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்.. அதற்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டது. அந்த ஆவணங்களை வாங்குவதற்காக பஞ்சாப்பில் உள்ள கல்லூரிக்கு சென்றிருந்தார்.
இதற்காக 16-ந் தேதி பஞ்சாப்புக்கு அகன்ஷா சென்றார். அமிர்தசரசில் உள்ள நண்பரின் அறையில் தங்கியிருக்கிறார். பின்னர் மறுநாள் 17-ந் தேதி அங்கிருந்து கேரளாவை சேர்ந்த நண்பருடன் கல்லூரிக்கு பைக்கில் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் திடீரென்று கல்லூரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து அகன்ஷா உயிரை விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஜலந்தர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் இது பற்றி அகன்ஷாவின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மகள் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகன்ஷாவின் தந்தை ஜலந்தர் போலீசாரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்ற ஜலந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என விசாரித்தனர்.
விசாரணையில் அகன்ஷா கொலை செய்யப்படவில்லை என்பதும் காதல் விவகாரத்தில் அகன்ஷா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் போது பிஜில் மேத்யூ என்ற பேராசிரியருடன் அகன்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிஜில் மேத்யூவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அகன்ஷா அவரை காதலித்தாராம்.
இந்தநிலையில் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்ற அகன்ஷா மீண்டும் பிஜில் மேத்யூவை சந்தித்துள்ளார். மேலும் பிஜில் மேத்யூவின் வீட்டில் தங்கிய அகன்ஷா, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிஜில் மேத்யூ மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர்.
அங்கு வைத்து மீண்டும் 2 பேருக்கும் இடையே திருமண விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். அப்போது கோபம் அடைந்த அகன்ஷா கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக பிஜில் மேத்யூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications