அடுத்தடுத்து ஷாக்! மாணவியின் ‘அந்த’ வீடியோ ஸ்டேட்டஸ்! ட்யூஷன் மாணவியிடம் சில்மிசம்..கலங்கிய கர்நாடகா
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் மாணவியின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்த ஆசிரியர் ஒருவரும், ட்யூஷன் வந்த மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான அத்துமீறல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மாணவி ஒருவரின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக ஆசிரியர் ஒருவரை கிராம மக்கள் அடித்து துவைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் எகுந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் அதே பள்ளியில் படித்துவரும் ஒரு மாணவியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த மாணவியுடன் அடிக்கடி தனிமையில் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது செல்போனில் வைத்துள்ளார்.

ஆபாச ஸ்டேட்டஸ்
இந்நிலையில் அந்த மாணவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இதனால் கோபமடைந்த ஆசிரியர் மகேஷ் திருமணத்தை நிறுத்துவதற்காக தனது வாட்ஸ் அப்பில் மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இதனால் அந்த மாணவியின் திருமணம் தடைபட்டு போனது.

ஆசிரியர் கைது
ஆசிரியர் மகேஷின் இந்த செயல் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்களும் கிராம மக்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் மகேஷை பிடித்து அடித்து உதைத்தனர். பின் அவரை காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல மற்றொரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை
ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகாவ்வில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்பித்த பேராசியர் ஒருவர், தன்னிடம் மாணவி ஒருவர் டியூஷனுக்கு வந்தபோது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். மாணவி கர்ப்பமாக இருந்ததால், அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது IPC பிரிவுகள் 376 (2) (N) மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications