துளி கூட பந்தா இல்லை! பெங்களூரில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குடும்பம்! மக்களுடன் மக்களாக ஐக்கியம்
பெங்களூர்: பிரிட்டன் நாட்டின் பிரதமர் குடும்பத்தினர் மிக எளிமையாகப் பெங்களூரில் உள்ள புத்தக ஸ்டாலில் புத்தகங்களை செக் செய்யும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இங்கிலாந்து பிரதமராக இப்போது இருப்பவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். அவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மகள் அக்ஷதா மூர்த்தியைத் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவர்களது திருமணம் கூட இந்தியாவில் தான் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இதற்கிடையே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் செய்யும் செயல்கள் எப்போதும் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம் பிடிக்கும்.
நாராயண மூர்த்தி: குறிப்பாக நாராயண மூர்த்தி ஐடி ஊழியர்கள் அனைவரும் மாதம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சொன்னது இணையத்தில் பயங்கர டிரெண்டிங் ஆனது. இதற்கிடையே இப்போது அவர்களின் மற்றொரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அவர்கள் பெங்களூரில் சிறிய புத்த ஸ்டால் ஒன்றில் புத்தகங்களை செக் செய்யும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஷயம் என்னவென்றால் அவர்களின் மனைவியும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி உடன் இருக்கிறார். மேலும், ரிஷி- அக்ஷதா தம்பதியின் மகள்களான அனுஷ்கா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் உடன் இருக்கிறார். அவர்கள் அங்கே உள்ள புத்தகக் கடைகளை வரிசையாகப் பார்க்கிறார்கள்.
டிரெண்டிங் வீடியோ: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர்கள் அங்கே உள்ள சிறிய புத்தக ஸ்டாலில் புத்தகங்களைப் பார்க்கிறார்கள். எந்தவொரு பெரிய பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் சாதாரணமாக மக்களுடன் மக்களாகப் பிரிட்டன் பிரதமர் குடும்பத்தினர் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவுகிறது. இது கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராகவேந்திரா மடத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் பெங்களூரில் உள்ள ராகவேந்திரா மடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியுடன் இருக்கிறார். அவர்களின் எளிமை வியக்க வைக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் கெடுபிடிகள் எதுவுமே இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஐஸ்கிரீம்: இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேநேரம் நாராயண மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் அவர்களின் எளிமைக்காகப் பாராட்டுகளைப் பெறுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது தந்தை நாராயண மூர்த்தியும் பெங்களூரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடையில் சாதாரணமாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட படம் டிரெண்டாகி இருந்தது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் பெங்களூரில் தனது பெற்றோருடன் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அதேநேரம் ரிஷி சுனக் இப்போது இந்தியாவுக்கு வரவில்லை. முன்னதாக அவர் கடந்த செப். மாதம் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளத் தனது மனைவி அக்ஷா மூர்த்தி உடன் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர்கள் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையும் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications