கர்நாடகாவில் புது ரூல்ஸ்.. சிக்மங்களூர் வழிபாட்டு தளங்களில் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடு.. ஏன்?
பெங்களூர்: கர்நாடகாவில் மத ரீதியாக பல்வேறு புதிய விதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சிக்மங்களூர் நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிகளுக்கு வந்த மாணவியருக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து வகுப்பிற்கு ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வர கூடாது என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்தது. இதற்கு எதிராக அங்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஹிஜாப் தடை
ஆனால் இந்த வழக்கில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.

ஸ்பீக்கர்
ஹிஜாப் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுமைக்கும் இந்த தடை விதிக்கப்படவில்லை. சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அங்கு இருக்கும் அனைத்து வார்டுகளிலும் உள்ள மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன காரணம்
முன்பே அங்கு லவுட் ஸ்பீக்கர் வைக்க பர்மிஷன் வாங்கி இருக்கும் பட்சத்தில் அதை நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் வழிபாட்டு தளங்களில் இருக்கும் ஸ்பீக்கர்கள் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்.

ஒலி மாசு
ஒலி மாசு ஏற்படுவதாக பலர் வைத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும். அனைத்து கோவில், மசூதி, சர்ச்சில் இது தொடர்பான சோதனைகள் செய்யப்படும் என்றும் அந்நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மசூதிகளில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு தொழுகைக்கு மக்களை அழைக்கும் நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடுப்பி கோவில்
முன்னதாக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடை போடும் ஏலத்தை இந்துக்களுக்கு மட்டுமே கொடுப்போம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்த காரணத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் இடையே இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் சிக்மங்களூரில் லவுட் ஸ்பீக்கர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications