பெங்களூரில் விமானப்படை அதிகாரி மீது நடந்த தாக்குதலில் எதிர்பாராத திருப்பம்.. வெளியான சிசிடிவி ஆதாரம்
பெங்களூர்: பெங்களூரில் விமானப்படை விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதுபைக்கில் வந்த டெலிவரி பாய், கன்னடத்தில் திட்டியதாகவும் பின்னர் அவரை டெலிவரி பாய் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டெலிவரி பாயை விமான படை அதிகாரி 20 முதல் 30 முறை குத்துவதாக சிசிடிவி வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், குறிப்பட்ட விமான படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பெங்களூருவில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா, டிஆர்டிஓ காலனி, சிவி ராமன் நகரில் இருந்து விமான நிலையம் நோக்கி காரில் பயணித்துள்ளனர். அப்போது ஒரு பைக் ஓட்டுநர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். காரை ஓட்டிய விவகாரத்தில் கோபம் அடைந்த பைக் ஓட்டுனர், விமானப்படை அதிகாரியை மறித்து கன்னடத்தில் திட்டத் தொடங்கியதாக கூறப்படுகிறது. திடீரென இது சண்டையாக மாறி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் விமானப்படை அதிகாரி அதித்யா போஸ் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயம் அடைந்த விமானப்படை அதிகாரி அதித்யா போஸ் இந்த தாக்குதல் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தனது காயங்களைக் காட்டினார். ரத்தம் வடிந்த நிலையில் சம்பவம் குறித்து விவரித்தார். அந்த வீடியோவில் அதித்யா போஸ் கூறுகையில், அந்த பைக் ஓட்டுநர் முதலில் திட்டிக்கொண்டே வந்தார்கள் ஆனால் எனது காரில் 'டி.ஆர்.டி.ஓ.' ஸ்டிக்கரைப் பார்த்ததும் இன்னும் கோபமடைந்து, எங்களைத் திட்டவும் அடிக்கவும் தொடங்கிவிட்டார் என்று கூறினார். அந்த பைக் ஓட்டுநர் சாவியால் நெற்றியில் அடித்ததாகவும், காரின் மீது கல்லை எறிந்து தாக்கியாகவும் கூறப்பட்டது.
வேடிக்கை பார்த்த பொதுமக்கள் யாரும் உதவி செய்யவில்லை என்றும் விமானப்படை அதிகாரியையும் அவரது மனைவியையும் தான் உள்ளூர் மக்கள் திட்டியதாகவும், கன்னடத்தில் அந்த விமானப்படை தம்பதி பேசாத நிலையில், உள்ளூர் இளைஞருக்கே அவர்கள் ஆதரவாக வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் விமானப்படை அதிகாரி போஸ் இஸ்டாவில் கூறியிருந்த நிலையில், வீடியோ வேகமாக பரவியது. இதையடுத்து பைக்கில் வந்து தாக்கிய இளைஞர் குறித்து விசாரணை நடந்தது. அவர் டெலிவரி பாய் என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Here you go! DRDO officer caught beating up Swiggy delivery boy mercilessly in Bengaluru. Not sure who started first, but the DRDO officer almost ki**ed the delivery agent. pic.twitter.com/QC9sVl5KFL
— Sharath Sharma Kalagaru (@sharathmsharma) April 21, 2025
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட டெலிவரி பாய், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். ஐ.ஏ.எஃப் அதிகாரியும் அந்த இளைஞரை 20 முதல் 30 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி ஆதாரம் வெளியாகி உள்ளது. ரத்த காயத்துடன் விமானப்படை அதிகாரி உள்ள நிலையில், யார் முதலில் யாரை அடித்தார்கள் என்பது தெரியவில்லை என நேரில் பார்த்த சாட்சிகள் கூறினார்கள்.. தற்போது விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும். இதனிடையே விமானப்படை அதிகாரிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், குறிப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications