செல்போனில் பேசுவதை கண்டித்த கணவனுக்கு.. அதிகாலை கனவு காணும் நேரத்தில் கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
பெங்களூர்: இன்றைக்கு செல்போனில் பேசுவது அதிகமாகிவிட்டது.முன்பெல்லாம் கிராமங்களில் வீதிகளில் ஆண்களை கூட்டம்கூட்டமாக பார்க்க முடியும். போனது வந்தது பேசிக்கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் இன்று யாரிடமும் பேசாமல் செல்போனையே வீட்டுக்குள் அமர்ந்து பார்க்கிறார்கள். சில பெண்களுமே பக்கத்து வீடுகளில் பேசுவது கூட இல்லை.. செல்போனில் அதிகம் பேசுவதையே நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். அப்படி செல்போனிலேயே பேசுவதை கண்டித்த கணவனுக்கு என்ன நடந்தது என்பதை பாருங்கள்.
செல்போனில் மனைவி பேசுவது குறித்து சந்தேகப்படும் கணவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை பார்த்து சந்தேகப்பட்டு சண்டை போடுவது சகஜம் ஆகிவிட்டது. செல்போனிலும், இன்ஸ்டாகிராமிலும் காதல் வலையில் விழுந்து திருமணம் ஆன பெண்களே பலர் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதேநேரம் சந்தேகத்தாலும் பல ஆண்கள் மனைவியை பிரிந்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள். கர்நாடகாவின் விஜயாப்புராவில் நடந்தது பற்றி பார்ப்போம்.

கர்நாடகாவின் விஜயாப்புரா மாவட்டம் ஆதர்ஷ்நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட அலகுன்டே நகரில் அஜீத் ராத்தோட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேஜு ராத்தோட் அடிக்கடி செல்போனில் பேசுவாராம். எப்போதும் யாருடனாவது செல்போனில் பேசுவது, வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருப்பது என்று ஆக்டிவ்வாக இருப்பாராம். இதை பார்த்து கோபம் அடைந்த கணவர் அஜீத், மனைவி தேஜுவிடம் கேட்டுள்ளார். மேலும் இதுபோன்று செல்போனில் பேசுவது மற்றும் குறுந்தகவல் அனுப்ப கூடாது என்று கூறி கண்டித்த அஜீத், இவற்றை நிறுத்தும்படி எச்சரித்து வந்தாராம்.
இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோல, நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாம். பின்னர் அஜீத் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அஜீத்தை, தேஜு கத்தியால் குத்திவிட்டாராம். அவரது கழுத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு அலறியுள்ளார் அஜித்,
அப்போது குடும்பத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து அஜீத் அறைக்கு சென்றனர். அங்கு தேஜு கத்தியுடனும், அஜீத் கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடுவதையும் கண்டு அதிர்ந்து போனார்கள். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் ஆதர்ஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தேஜு எப்போதும் செல்போனில் பேசுவது, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை நிறுத்தும்படி அஜீத் கூறியதால் ஏற்பட்ட தகராறில், அவரை தேஜு கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆதர்ஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேஜுவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications