இந்தியா அமெரிக்கா உறவில் மற்றொரு மைல்கல்.. விண்வெளி உறவு தொடர்பாக மிக முக்கிய மாநாடு
பெங்களூர்: அமெரிக்க-இந்தியா விண்வெளி பிஸ்னஸ் ஃபார்ம் பெங்களூரில் நடைபெற்றது. விண்வெளித் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த ஃபார்மில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இதில் 14 முன்னணி அமெரிக்க விண்வெளி நிறுவனங்களைச் சேர்ந்த 23 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் அமெரிக்க-இந்தியா விண்வெளி பிஸ்னஸ் மன்றம் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகம், USISPF எனப்படும் அமெரிக்க-இந்தியா பார்டனர்ஷிப் மன்றம் இணைந்து இதை நடத்தியது. அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் சர்வதேச புரிதலுக்கான வணிகக் கவுன்சில் இணைந்து இந்த நிகழ்வை ஏற்படு செய்திருந்தது.

அமெரிக்கப் பிரதிநிதிகள்
விண்வெளித் துறையை பிஸ்னஸ் தொடர்பாக நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இதற்காக 14 முன்னணி அமெரிக்க விண்வெளி நிறுவனங்களைச் சேர்ந்த 23 நிர்வாகிகள் இந்தியா வந்திருந்தனர். இரு தரப்பு விண்வெளி ஒத்துழைப்பில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இக்கூட்டங்களில், இரு நாடுகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தொழில் துறையினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "இந்த ஃபாரம் அமெரிக்க- இந்தியா பார்ட்னர்ஷிப் பலத்தையும், விண்வெளித் துறையில் வளர்ச்சிக்கான நமது கூட்டு உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. விண்வெளித்துறை மிகப் பெரும் வளம் மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் கொண்டது. விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உலகிற்கு வழிகாட்டுகின்றன. இந்த ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதில் இந்தியா ஒரு முக்கிய நாடாகும்" என்று தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்வுகள்
இரண்டு நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க- இந்தியா வணிக விண்வெளி மிஷன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சந்தை அணுகல், அரசு கொள்முதல், அந்நிய நேரடி முதலீட்டுச் சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. இது முந்தைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி, கொள்கை சீரமைப்பிற்கு வழி வகுத்ததுடன், நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பையும் விரிவாக்கியது.
அமெரிக்காவின் முக்கிய விண்வெளி நிறுவனங்களான அமேசான், ஆக்ஸியோம் ஸ்பேஸ், ஏபெக்ஸ், பிளாக் ஸ்கை, எல்வ், கேஹான் ஸ்பேஸ், பார்க் ஏரோஸ்பேஸ், பிளானட் லேப், ரீசெக்யூரிட்டி, ஸ்பேஸ்எக்ஸ், வாஸ்ட் ஸ்பேஸ், அம்ப்ரா ஸ்பேஸ், வயாசாட், மற்றும் வான்டர் ஆகியவை இதில் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்தப் பிரதிநிதிகள் டெல்லிக்குச் செல்கிறார்கள். அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் முதல் கூட்டம்
அமெரிக்க வர்த்தகத் துறையால் நடத்தப்படும் இரண்டாவது விண்வெளி சார்ந்த கூட்டம் இதுவாகும். இந்தியாவில் இதுபோல நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும். வணிக விண்வெளித் துறையில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை வலியுறுத்துவதுடன், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் அமெரிக்க- இந்தியா உறவு வளர்ந்து வரும் வேகத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதன் தொடக்க விழாவில், யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் நிர்வாக இயக்குநர் நிவேதிதா மெஹ்ரா, அமெரிக்க வர்த்தகத் துறை NOAA விண்வெளி வர்த்தக அலுவலகத்தின் செயல் இயக்குநர் ஜானிஸ் ஸ்டார்சிக், இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளித் துறைச் செயலாளர் டாக்டர் வி. நாராயணன், இந்திய விண்வெளித் துறை இணைச் செயலாளர் சொர்ணஸ்ரீ ராவ் ராஜசேகர் மற்றும் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் செயல் துணைத் தூதர் மற்றும் முதன்மை வணிக அதிகாரி கேரி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரிவான ஆலோசனை
இந்த நிகழ்வில், "சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியோம்-4 திட்டம்: பாடங்களும் எதிர்காலப் பயணமும்" என்ற தலைப்பிலான சிறப்பு அமர்வு நடைபெற்றது. அதில் இந்திய விமானப்படை விண்வெளி வீரர்களான கேப்டன் பிரசந்த் பாலகிருஷ்ணன் நாயர் மற்றும் ஆக்ஸியோம்-4 பயணத்தில் விண்வெளி சென்ற சுபான்சு சுக்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதேபோல இந்த நிகழ்வில் “Building the Low Earth Orbital Economy” என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்க மற்றும் இந்திய வணிக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்ட நிலையில், இதுவும் முக்கியத்துவம் பெற்றது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் மற்றும் கேரி அருண் ஆகியோருடன் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications