பெங்களூரில் இருக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்துக் கொள்ளுங்கள்: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
பெங்களூர்: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழைய கூடாது என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மைசூர் பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடகா ராஜ்ய ரைத்தா சங்கம் மற்றும் ஹசிரு சேனா இயக்கத்தினர் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவ படத்தை கிழித்தெறிந்திருக்கின்றனர். இதனையடுத்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் நாளை 'முழு அடைப்பு' போராட்டத்திற்கு கன்னட விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் கால் வைக்க கூடாது என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "இங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை நான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எந்த தண்ணீரை குடிக்கிறார்கள்? அவர்கள் அதை குடிக்க வேண்டுமா வேண்டாமா?
அவர்கள் தண்ணீரை குடிக்க வேண்டும் எனில் உங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள். இல்லையெனில், ரயில்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் மூலமாக அவர்களை தமிழ்நாட்டிற்குள் அழைத்துக்கொள்ளுங்கள். காவிரி நீரை குடிக்காமல் தமிழகம் திரும்பும்படி கூறுங்கள் பார்க்கலாம். இனி வரும் நாட்கள் அவ்வளவு எளிதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் இது. தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது.
காவிரி குறித்த அவரது நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம். ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பிற்களா? அல்லது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா? என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications