அடுத்த சக்சஸ்.. சுட சுட நிலாவின் படங்களை அனுப்பிய சந்திரயான் 3! விக்ரம் லேண்டர் இணைப்பும் வெற்றி
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிபெற்று உள்ளது.
உலகளவில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சாதித்து உள்ளன. இந்த வரிசையில் 4 வது நாடாக சேர்ந்து இருக்கிறது வளர்ந்து வரும் நாடான இந்தியா. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்து இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் சந்திரயான் 3 இஸ்ரோ அனுப்பியது.
விண்ணில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை அது சுற்றி வந்தது. அதன் பின்னர் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, பல நாட்களாக நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது.
நிலாவை விக்ரம் லேண்டர் தொட்ட உடனே சந்திரயான் 3 இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது. இதுதொடர்பாக இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான். சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலமாக வெற்றிகரமாக இந்தியா நிலவில் விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை பெற்று இருக்கிறது. குறிப்பாக விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று இருக்கிறது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு நிலவின் மேற்பகுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பி இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்களை இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது. நிலவுக்கு மிகவும் அருகாமையில் சாம்பல் நிறத்தில் பல்வேறு பள்ளங்களுடன் அந்த படங்கள் காட்சி தருகின்றன. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ள இஸ்ரோ "விக்ரம் லேண்டர் உடனான பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications