'நாங்கள் அரசை நடத்தவில்லை'.. ஏதோ மேனேஜ் செய்றோம்.. அமைச்சரின் ‘ஷாக்’ ஆடியோ..தர்மசங்கடத்தில் பசவராஜ்
பெங்களூரு: கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜேசி மதுசாமி, ''நாங்கள் அரசை நடத்தவில்லை. ஏதோ மேனேஜ் செய்கிறோம்'' என்று பேசியுள்ள நிலையில், தற்போது இந்த ஆடியோ கர்நாடக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

கட்சி மேலிடம் அதிருப்தி
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் முதல்வர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா விலகினார். இதையடுத்து, அவரது தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்று கடந்த ஜூலை மாதம் ஒரு ஆண்டு ஆன நிலையில், அவரது செயல்பாடுகளில் கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.

பதவி பறிக்கப்பட உள்ளதா?
இதன் காரணமாக பசவராஜ் பொம்மையின் முதல்வர் பதவி பறிக்கப்பட இருப்பதாக கடந்த வாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், பசவராஜ் பொம்மை கடும் அதிருப்தி அடைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக வருகையும் இந்த பேச்சுக்கு மேலும் தூபம் போட்டது. இதனால், பசவராஜ் பொம்மை பதவி பறிக்கப்பட இருப்பதாக எதிர்க்கட்சிகளும் கூறி வந்தன. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

உற்சாகத்தில் பசவராஜ் பொம்மை
இந்த நிலையில், பசவராஜ் பொம்மையை முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்றும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவரது தலைமையில்தான் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்கும் என்று கட்சி மேலிடம் கூறியது. இதனால், நெருக்கடியில் இருந்து மீண்ட பசவராஜ் பொம்மை உற்சாகம் அடைந்தார். இந்த சலசலப்புகளால் பசவராஜ் பொம்மை சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது கர்நாடக அமைச்சரின் ஆடியோ ஒன்று அம்மாநில அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேனேஜ் மட்டுமே செய்கிறோம்
இன்று காலை முதல் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வரும் ஆடியோ கிளிப்பில், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் ஜேசி மதுசாமி, ''நாங்கள் அரசை நடத்தவில்லை.. நாங்கள் அதை மேனேஜ் மட்டுமே செய்கிறோம்'' என்று பேசுகிறார். இந்த ஆடியோவில் பேசுவது நான் தான் என ஒப்புக்கொண்ட ஜேசி மதுசாமி, தனது கருத்து திரிக்கப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். எனினும், அரசை விமர்சிக்கும் வகையில்,சொந்த அமைச்சரே பேசியிருப்பது பசவராஜ் பொம்மைக்கு புதிய தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது.

பதவி விலக வலியுறுத்தல்
இதற்கிடையே, சட்டத்துறை அமைச்சர் ஜேசி மதுசாமி பதவி விலக வேண்டும் என்று சக அமைச்சர்கள் சிலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், இது குறித்து பேசியுள்ள பசவராஜ் பொம்மை, "சம்பந்தப்பட்ட அனைவருடன் பேசி பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன். வங்கி விவகாரம் தொடர்பாக அமைச்சர் இவ்வாறு பேசியிருக்கிறார்" எனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பசவராஜ் பொம்மை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பசவராஜ் பொம்மைக்கு கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு குறைந்து வருவதாக பரவலாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேபோல், வகுப்புவாத மோதல்களும் கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?












Click it and Unblock the Notifications