மேகதாது அணை கட்டும் பணிகளை தொடங்கிவிட்டோம்.. டிகே சிவக்குமார்
பெங்களூர்: மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் விவசாய நிலம் 6% அதிகரித்துள்ளது என்றும், கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டிக் கொண்டே வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுமான முயற்சிகளை செய்து வருகிறது.

மேகதாது அணை
காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால் அது பெரும் பாதகமாக வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அடம் பிடித்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதியையும் கர்நாடகா ஒதுக்கி உள்ளது. மேலும் அணை கட்ட மத்திய அரசிடம் ஒப்புதலும் கோரியுள்ளது. எனினும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கையில் தமிழகம் இறங்கினாலும் கூட, கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்தே வருகிறது.
பணியை தொடங்கிவிட்டோம்
இந்த நிலையில் தான், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறியதாவது:-
கர்நாடகாவில் விவசாய நிலம் 6% அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம்" என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications