பெங்களூர் அடுக்குமாடி வீட்டில்.. மனைவியின் முடிவால் மன அழுத்தம்.. ஐடி ஊழியர் பிரசாந்த் இருந்த கோலம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரம் என்று சொல்லலாம்..இங்கு தான் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவிற்கு ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. பல லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா பல மாநில ஐடி ஊழியர்கள் பணிபுரியும் இடமாக பெங்களூர் இருக்கிறது. ஐடி ஊழியர்கள் மன அழுத்தம், குடும்ப பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மனைவி மகனை பிரிந்து வாழ்ந்த இன்ஜினியர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பல ஆயிரம் ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல லட்சம் ஐடி ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஐடி ஊழியர்களை பொறுத்தவரை சம்பளம் அதிகமாக இருந்தாலும், வேலை என்பது உண்மையில் பல இடங்களில் நிரந்தரமாக இருப்பது இல்லை.. திடீரென நிறுவனம் மாற வேண்டிய நிலை இருக்கும். அல்லது திடீரென வேலை போகும்.. திடீரென நல்ல சம்பளத்துடன் வேறு இடத்தில் வேலையும் கிடைக்கும். இப்படித்தான் வேலைகள் இருக்கும் என்பதற்கு உத்தரவாதமும் கிடையாது.

அதேநேரம் வேலை முறையை பொறுத்தவரை பல நேரங்களில் டார்கெட்டை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் பொதுவாக ஐடி ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம் காரணமாக சிலரது குடும்ப உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது. இளம் வயதிலேயே இதனால் தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூரில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.
பெங்களூரு சோழதேவனஹள்ளி அருகே சிக்கபானவாராவில் அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதாகும் பிரசாந்த் நாயக் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். தம்பதியின் சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். கம்ப்யூட்டர் இன்ஜினியரான பிரசாந்த் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவரை பிரிந்த பூஜா தனது மகளுடன் தனியாக வசிக்கிறார். அவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி, மகளை பிரிந்த பிரசாந்த், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்தார். மேலும் விவாகரத்து கோரி தம்பதி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்கள்.இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பிரசாந்த் திடீரென்று உயிரை மாய்த்துக் கொண்டார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து பிரசாந்தை, அவரது தந்தை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போயிருக்கிறது.
இதுபற்றி சோழதேவனஹள்ளி போலீசாருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டுக்கு சென்ற போது தான் பிரசாந்த் தூக்கிட்டது தெரிந்தது. குடும்ப பிரச்சினையில் மனைவி, மகள் பிரிந்து வாழ்வதால் மனம் உடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்மையில் மனைவி பொய் புகார் கொடுத்த காரணத்தால் ஐடி ஊழியர் ஒருவர் உயிரைவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications