பெங்களூர் பஸ்ஸில் ஐடி இன்ஜினியர் சுமா.. போனில் காதலன் சொன்ன அந்த வார்த்தை.. அடுத்த நொடியே பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சோனகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சுமா, பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சிவராத்திரியையொட்டி சொந்த ஊர் வந்த சுமா, பின்னர் பெங்களூருக்கு பேருந்தில் புறப்பட்டார். செல்போனில் பேசியபடி வந்த இளம் பெண் சுமா, திடீரென ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கினார். அதன்பின்னர் அவர் செய்த செயல் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைய 2கே கிட்ஸ் இளைஞர்கள், இளம் பெண்கள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் வாழ பிடிக்காமல் தவறான முடிவெடுக்கிறார்கள்.. வாழ்க்கையில் கஷ்டங்களை பார்த்து வளராமல் இருந்தது, பிரச்சனைகளை பக்குவமாக கையாளத் தெரியாதது, ஒருவர் குறை சொன்னால், அதில் உள்ள நியாயங்களை அறிய விரும்பாதது, அறிவுரை கூறினால் உதாசினப்படுத்துவது என்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கிறது.

இதன் காரணமாக பணம் இல்லாத நெருக்கடியான சூழல்கள், மற்றவர்கள் முன்பு அவமானம் ஏற்படும் சூழல், வாழ்க்கையில் நம்பிக்கை துரோகங்கள் ஆகியவற்றை சந்திக்கும் போது, அதை கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள்.. இவ்வளவு தான் வாழ்க்கை..இனிமேல் வேண்டாம் என்று தவறாக முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூர் ஐடி பெண் ஊழியர் தவறான முடிவெடுத்துள்ளார். அந்த முடிவு அவரை மட்டுமல்ல... அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உறவினர்களை பாதித்துள்ளது.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சோனகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் சுமா என்பவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இளம் பெண் சுமா, படித்து முடித்தபின்னர் பெங்களூர் சென்று, அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பெரிய தனியார் ஐடி நிறுவனத்தில் சுமா தற்போது வரை வேலை செய்து வந்தார். இந்த வேலை காரணமாக இளம் பெண் சுமா, பெங்களூரிலேயே அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரியையொட்டி இவர் பெங்களூருவில் இருந்து சோனகனஹள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் தனது கிராமத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தார். அப்போது சுமா யாருடனோ செல்போனில் பேசியபடி வந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் சுமா மற்றும் போனில் பேசியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமா அந்த நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டபடி இருந்தாராம். தொடர்ந்து அவர் குனிகல் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டார். பின்னர் அவர் தொட்டகெரே அருகே உள்ள ஒரு ஏரிக்கு சென்று ஏரியில் குதித்துள்ளார். அதில் அவர் வெளியே வரவில்லை.. இறுதியாக உயிரிழந்த நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சுமா ஒரு இளைஞரை காதலித்து வந்ததும், பஸ்சில் வரும்போது காதலன் சண்டை போட்டதும், இதனால் மனமுடைந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications