மணமகனுக்கு பரிசு கொடுத்த பெங்களூர் அமேசான் ஊழியர்... மணமேடையில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
பெங்களூர் : பெங்களூரில் அமேசான் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தவர் வம்சி என்பவர் ஆந்திராவின் கர்னூலில் உள்ள தனது நண்பனுக்கு திருமணத்தின்போது பரிசு கொடுக்க வந்தார். அந்த பரிசை சர்ப்ரைஸ் கிஃப்டடாக வைத்திருந்தார். அந்த பரிசை நண்பனான மகனுக்கு கொடுத்தார். என்ன பரிசு என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பரிசை கொடுத்த நண்பன் மேடையில் மயங்கி விழுந்தார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பொதுவாக திருமணம் என்றாலே இருமணங்கள் இணைவ்து என்பதை தாண்டி, திருமண விழாவில் பங்கேற்க வரும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே பரிசுகளை வழங்குவார்கள். இதுவரை சந்திக்காத பள்ளி, கல்லூரி தோழர்களை நேரில் சந்திக்க முடியும். திருமண விழாவில் நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ முடியும். நண்பனின் திருமணத்திற்கு போகிறவர்கள் வெறும் கையுடன் போகாமல் தங்களால் முடிந்த பரிசுகளை தருவார்கள்.

கை கடிகாரம், கண்ணாடி, சுவர் கடிகாரம், ரொக்க பரிசு, தங்க மோதிரம், தங்க செயின், நினைவு பரிசுகள், பொம்மை, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, ஸ்கூட்டர், கார் என அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் பரிசுகளை அள்ளி வழங்குவாரகள். அப்படித்தான் பெங்களூர் அமேசான் ஊழியர் ஆந்திராவில் உள்ள திருமணம் ஆக உள்ள நண்பனுக்கு பரிசு கொடுத்துள்ளார். ஆனால் மணமேடையிலேய சரிந்து விழுந்து உயிரை விட்டுள்ளார் .
பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் வம்சி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பரின் திருமணம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் பெனுமடா என்ற கிராமத்தில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க பெங்களூரில் இருந்து சென்ற வம்சி, அங்கு நடந்த திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார்.
திருமணம் முடிந்ததும் உற்றார், உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது பெங்களூர் அமேசான் ஊழியர் வம்சியும் தான் வாங்கி வந்த பரிசுப்பொருளை மணமகனிடம் கொடுத்தார். மேலும் அந்த பரிசை மணமேடையில் வைத்தே அவர் பிரித்து பார்த்தார். சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரம் அந்த பரிசு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த சமயத்தில் வம்சி திடீரென மயங்கி விழுந்தார். கீழே விழ முயன்ற அவரை, சக நண்பர்கள் கைகளால் தாங்கிப்பிடித்தார்கள்.
அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக வம்சி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். வம்சியின் மரணத்தால், திருமண வீடு துக்க வீடாக மாறியது. இதுதொடர்பான காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications