அதிகார ஆசை.. குடும்ப அரசியல்! அடித்து தூக்கிய காங்கிரஸ்! கர்நாடகாவில் ஜேடிஎஸ் வீழ்ந்தது இப்படித்தான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் எப்போதும் கிங்மேக்கராக இருக்கும் கட்சி ஜேடிஎஸ். காங்கிரஸ், பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் குறுக்கே புகுந்து முதல்வர் பதவியை பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சி இந்த முறை வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது. கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் அந்த கட்சியின் மோசமான செயல்பாடு இதுதான். இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சி தோல்விக்கு முக்கிய 3 காரணங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது.
கர்நாடகாவில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றனர்.

இந்த தேர்தல் மூலம் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பாஜக கடந்த முறை 104 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் தற்போது 66 இடங்களில் மட்டுமே வென்றது. அதேபோல் ஜேடிஎஸ் கட்சி கடந்த முறை 37 தொகுதிகளில் வென்ற நிலையில் இப்போது வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் அந்த கட்சி மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஓல்டு மைசூர் மாவட்டங்களில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் வென்றது. மாறாக ஜேடிஎஸ் கட்சி 14 இடங்களை கைப்பற்றியது. ஓல்டு மைசூர் மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சியின் மிக மோசமான செயல்பாடு இதுதான். மாறாக காங்கிரஸ் கட்சி அங்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜேடிஎஸ் கட்சிக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இதற்கிடையே தான் ஜேடிஎஸ் கட்சி வீழ்ச்சிக்கான காரணத்தை ஒரு சிறுவிளக்கத்துடன் பார்த்தால் நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
அதாவது கடந்த 2004 ம் ஆண்டில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு 222 தொகுதிகளில் போட்டியிட்டு 80 தொகுதிகளில் வென்றது. அப்போது ப பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. இதையடுத்து 113 தொகுதிகள் இல்லாததால் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டு ஜேடிஎஸ் குமாரசாமியும், அடுத்த இரண்டரை ஆண்டு பாஜகவின் எடியூரப்பா என ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதலில் குமாரசாமி முதல்வராக செயல்பட்ட நிலையில் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்தார். இதனால் கூட்டணி கவிழ்ந்து ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து 2008 ல் தேர்தல் நடந்தது. பாஜகவை ஜேடிஎஸ் ஏமாற்றிவிட்டாத எடியூரப்பா பிரசாரம் செய்தார். அனுதாபம் அலை அவருக்கு வீசியது. இதையடுத்து அந்த தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மாறாக ஜேடிஎஸ் கட்சி படுதோல்வியடைந்தது. ஜேடிஎஸ் 28 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் 80 இடங்களில் ஜெயித்தது. ஆட்சியமைக்க 113 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் வெற்றி பெற்ற சுயேச்சைகள் உதவியுடன் எடியூரப்பா முதல்வரானார். இவ்வாறு தான் கர்நாடகாவிலும், தென்மாநிலங்களில் முதல் முறையாகவும் பாஜக ஆட்சியை பிடித்தது.
அதன்பிறகு 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளில் வென்றது. பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் தலா 40 இடங்களிலும், சுயேச்சைகள் 4 தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து 2014 தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 தொகுதிகளில் வென்றன. யாருக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதிலும் அதிக இடங்களில் ஜெயித்த காங்கிரசுக்கு பதில் ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி தான் முதல்வரானார். இந்த கூட்டணியில் அமைச்சராக இருந்த ரேவண்ணா பல்வேறு விஷயங்களில் தலையிட்டார். குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாரியங்களில் தலையிட்டார். இதையடுத்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 17 பேர் பாஜகவுக்கு சென்ற நிலையில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதில் ஜேடிஎஸ்ஸை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் பெரி இழப்பு ஏற்பட்டது. ஏனென்றால் பெங்களூர் நகரில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஜேடிஎஸ்ஸை விரும்பாமல் பாஜகவுக்கு தாவினர். இதையடுத்து பாஜக ஆட்சி செய்தது.
இந்நிலையில் தற்போது 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 தொகுதிகளில் வென்றது. பாஜக 224 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 207 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் தான் தற்போது அந்த கட்சிக்கு பெரிய அளவில் அடி விழுந்துள்ளது. குறிப்பாக ஒக்கலிகர் மக்கள் அதிகம் உள்ள ஓல்டு மைசூர் இவர்களின் கோட்டையாகும். இங்கு 58 தொகுதிகள் உள்ளன. ஜேடிஎஸ் கட்சி வேட்பாளர்கள் இந்த பகுதியில் தான் ஜெயிப்பார்கள். ஆனால் தற்போது வெறும் 14 தொகுதிகளில் மட்டும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஜேடிஎஸ் கட்சி தனக்கு பலமாக இருக்கும் பகுதியில் கூட செல்வாக்கை இழந்துள்ளது. இது அந்த கட்சிக்கான எச்சரிக்கையாகும்.
முதல் விஷயம்: மேலும் ஜேடிஎஸ் கட்சி இப்படி வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக 3 விஷயங்களை கூறலாம். ஒன்று குமாரசாமியின் அதிகார ஆசை. மேற்கூறிய 5 தேர்தல்களை நன்கு கவனித்தால் குமாரசாமியின் அதிகார பதவி என்பது தெளிவாக தெரியும், 2004 ல் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணியில் முதல்வர் பதவியை விட்டு கொடுக்காதது, 2018 ல் அதிக இடங்களில் ஜெயித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டு முதல்வர் பதவியை தன்வசப்படுத்தினார். மேலும் இந்த முறை ரிசல்ட் வருவதற்கு முன்பே தன்னை முதல்வராக்க ஓகே சொல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என அவர் கூறியிருந்தார். இதன்மூலமே அவரது அதிகார ஆசையை நாம் புரிந்து கொள்ள முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2வது விஷயம்: ஜேடிஎஸ் கட்சியில் குடும்பத்தினருக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். தற்போதைய சூழலில் குமாரசாமி சென்னப்பட்டணா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவரது மனைவி அனிதா ராமநகர் எம்எல்ஏவாக இருந்தார். இந்த முறை மகன் நிகில் கவுடாவுக்கு விட்டு கொடுத்தார். ஆனால் நிகில் கவுடா நேற்று தோல்வியடைந்தார். குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா ஹெலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவரது மனைவி பவானி முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இந்த தம்பதியின் ஒரு மகன் எம்எல்சியாகவும், இன்னொருவர் எம்பியாகவும் உள்ளார். மேலும் குமாரசாமியின் தந்தை தேவேகவுடா எம்பியாக உள்ளார்.
3வது விஷயம்: ஜேடிஎஸ் கட்சியை குமாரசாமியின் தந்தை தேவேகவுடா உருவாக்கினார். அவர் தலைவராக செயல்பட்டு முதல்வர் முதல் பிரதமர் பதவி வரை எட்டிப்பிடித்தார். அவருக்கு அடுத்த படியாக குமாரசாமி கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கும் அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் அவரது மகன் நிகில் கவுடா அரசியலில் நுழைந்துள்ளார். விரைவில் அவர் ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக கூட நியமிக்கப்படலாம். இப்படி தொடர்ந்து வாரிசு முறையில் தான் கட்சியின் தலைமை பதவி வழங்கப்படுகிறது. இது அந்த கட்சிக்கு இன்னும் கூட பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனால் ஜேடிஎஸ் தலைமை சுதாரிக்க வேண்டிய தருணம் இது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications