தேவையான பாடம் மட்டுமே இருக்கும்.. ஆர்எஸ்எஸ் பாடப்பிரிவு நீக்கப்படுகிறதா? கர்நாடக அமைச்சர் பரபர பதில்
பெங்களூர்: கர்நாடகாவில் மாணவர்கள் நலன் கருதியே பாடப்புத்தகங்களில் திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாகவும் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு விவகாரங்களில் முந்தைய பாஜக அரசு எடுத்த நிலைப்பட்டிற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதனால், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக எம்.எல்.சி, பிகே ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரான கேசவ பலிராம் ஹெட்கேவர் ஒரு கோழைத்தனமானவர் எனவும் பிரிட்டிஷ்காரர்களுக்கு 6 முறை மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பான வாதங்களுக்கு வித்திட்ட நிலையில், பாடப்புத்தகத்தில் உள்ள கேசவ பலிராம் ஹெட்கேவர் குறித்த அத்தியாயம் நீக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சியில் இருந்த போது பள்ளி பாடப்புத்தகத்தில் செய்த மாற்றங்களை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பாவிடம், பாடப்புத்தகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குறித்த பாடத்தை நீக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மது பங்கரப்பா, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பாடங்கள் இருக்கும். அந்த பாடங்களை அவர்கள் படிக்க முடியும். பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து எந்த பகுதி நீக்கப்படும் என்பது குறித்து குறிப்பிட்டு சொல்ல நான் விரும்பவில்லை. இந்த முடிவை நிபுணர் குழு எடுக்கும்" என்றார்.
மேலும், முந்தைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த பங்கரப்பா, இது பாஜகவின் வெர்ஷன். ஏனெனில், குழந்தைகளின் மனநிலையையும் அவர்களுக்கு என்ன பாடம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. என்று கூறினார். பெங்களூர்: கர்நாடகாவில் மாணவர்கள் நலன் கருதியே பாடப்புத்தகங்களில் திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாகவும் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு விவகாரங்களில் முந்தைய பாஜக அரசு எடுத்த நிலைப்பட்டிற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதனால், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக எம்.எல்.சி, பிகே ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரான கேசவ பலிராம் ஹெட்கேவர் ஒரு கோழைத்தனமானவர் எனவும் பிரிட்டிஷ்காரர்களுக்கு 6 முறை மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பான வாதங்களுக்கு வித்திட்ட நிலையில், பாடப்புத்தகத்தில் உள்ள கேசவ பலிராம் ஹெட்கேவர் குறித்த அத்தியாயம் நீக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சியில் இருந்த போது பள்ளி பாடப்புத்தகத்தில் செய்த மாற்றங்களை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பாவிடம், பாடப்புத்தகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குறித்த பாடத்தை நீக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மது பங்கரப்பா, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பாடங்கள் இருக்கும். அந்த பாடங்களை அவர்கள் படிக்க முடியும். பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து எந்த பகுதி நீக்கப்படும் என்பது குறித்து குறிப்பிட்டு சொல்ல நான் விரும்பவில்லை. இந்த முடிவை நிபுணர் குழு எடுக்கும்" என்றார்.
மேலும், முந்தைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த பங்கரப்பா, இது பாஜகவின் வெர்ஷன். ஏனெனில், குழந்தைகளின் மனநிலையையும் அவர்களுக்கு என்ன பாடம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. என்று கூறினார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!

Click it and Unblock the Notifications