"அவள எதுக்கு தொடறீங்க? நீயெல்லாம் ஹெட்மாஸ்டரா".. குச்சியோடு வெகுண்டெழுந்த பள்ளி மாணவிகள்.. பரபரப்பு
பள்ளி தலைமை ஆசிரியரை கட்டி வைத்து மாணவிகளே குச்சியால் தாக்கியிருக்கிறார்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்காமல், பள்ளி மாணவிகளே வெகுண்டெழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..
ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறல்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஹாஸ்டல்ரூம்
நேற்றைய தினம் கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஸ்ரீரங்கட்டனா அருகே உள்ள கட்டேரி கிராமத்தில் அந்த அரசுப்பள்ளி இயங்கி வருகிறது... இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து தங்கி படிக்கிறார்கள்.. அதனால், இந்த பள்ளிக்கு ஹாஸ்டல் வசதியும் உண்டு.. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் சின்மயானந்த்மூர்த்தி.. இந்த பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் விடுதி உள்ளது, அந்த விடுதிக்கு பக்கத்திலேயே ரூம் எடுத்து இவர் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தலைமை ஆசிரியர், தண்ணி அடித்துள்ளார்..

உச்சிக்கேறிய போதை
மதுபோதையில் நேராக மாணவிகள் ஹாஸ்டலுக்குள்ளும் நுழைந்துவிட்டார்.. மாணவிகளின் ரூமுக்குள் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த ஒரு மாணவியை தட்டி எழுப்பி, தகாத முறையில் நடந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி சத்தம் போட்டு, சக தோழிகளிடம் விஷயத்தை சொல்லி, அனைத்து மாணவிகளும் ஒன்று திரண்டு வந்துள்ளனர்.. தலைமை ஆசிரியரை அந்த இடத்திலேயே கயிறு போட்டு கட்டிவைத்து தாக்கி உள்ளனர்... இந்த சம்பவம் நேற்று முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தலைமை ஆசிரியர் குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது.

ரவுண்ட்ஸ்
இந்த கட்டேரி பகுதியில் செயல்பட்டு வருவது பெண்கள் உயர்நிலைப்பள்ளியாகும்.. நீண்டகாலமாகவே சின்மயான்ந்த் மூர்த்திதான், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்... ஹாஸ்டல் பக்கத்திலேயே இவருடைய ரூமும் இருப்பதால், அடிக்கடி ஹாஸ்டலுக்கு இரவு நேரங்களில் ரவுண்ட்ஸ் வருவாராம்.. இந்த ஹாஸ்டலிலேயே தனியாக ஒரு ரூம் இருக்கிறதாம்.. அந்த அறைக்கு மாணவிகளை அழைத்து சென்று, தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டும் வந்திருக்கிறார்.

குச்சி கட்டை
நேற்று முன்தினம் இரவும், அப்படித்தான் போதையில் ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்துள்ளார்.. ஒரு மாணவியை தட்டி எழுப்பி தன்னுடைய அறைக்கே, அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்... அப்போது, அந்த மாணவி கண்ணீருடன் அறையைவிட்டு வெளியேறி, சக மாணவிகளிடம் நடந்ததை சொல்லி கதறி அழுதிருக்கிறார்... இதற்குபிறகுதான், ஒட்டுமொத்த மாணவிகளும் வெகுண்டெழுந்துவிட்டனர்.. ஹாஸ்டல் வளாகத்திலுள்ள கட்டை, குச்சிகளை இருட்டிலேயே தேடி எடுத்துக் கொண்டு, தலைமை ஆசிரியர் சின்மயான்ந்த் மூர்த்தியை சூழ்ந்துகொண்டனர்.

தொடாதீங்க
"அவள எதுக்கு தொடறீங்க சார்? நாங்க ஏதாவது தப்பு பண்ணோமா? நீயெல்லாம் ஹெட்மாஸ்டரா?" என்று பல கேள்விகளை கேட்டார்கள்.. தலைமை ஆசிரியரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சில மாணவிகள், கோபமடைந்து, குச்சி, கட்டைகளால் அவரை அங்கேயே சரமாரி வெளுத்தெடுத்தனர்.. இரவு நேரத்தில், ஹாஸ்டலுக்குள் கூச்சல் சத்தம் அதிகமாக கேட்டதால், அந்த கிராம மக்களுக்கும் விஷயம் பரவிவிட்டது. அவர்களும் திரண்டு வந்து, தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி தந்தனர்..

வெடுக் வெடுக்
பிறகு போலீசுக்கு போன் செய்து, அவரை ஒப்படைத்தனர். தலைமை ஆசிரியரிடம், மாணவிகள் ஆவேசத்துடன் நறுக் நறுக்கென கேள்வி கேட்கும் அந்த வீடியோதான் இணையத்தில் பரவி வருகிறது.. இந்த சின்மயான்ந்த் மூர்த்தி மீது, பாலியல் தொல்லை, பெண்களை பாலியல்ரீதியாகப் பின்தொடர்தல், மிரட்டல், போக்சோ என 6 கேஸ்கள் இப்போதைக்கு போடப்பட்டுள்ளது.. ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர்.. பிள்ளைகளை வழிநடத்தக்கூடியவர்களே இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி?!!

காமப்பேய்
இந்த ஹாஸ்டலில், 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகிறார்களாம்.. ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் இருந்தாராம் இந்த ஹெட்மாஸ்டர்.. கடந்த சில மாதங்களாகத்தான் நைட் நேரத்தில், ஹாஸ்டல் ரூமில் புகுந்து தொல்லை தருவதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது... தனியாக மாணவிகளை ரூமுக்கு அழைத்து சென்ற தொல்லை தரும் ஹெட்மாஸ்டர், செல்போன்களில் ஆபாச வீடியோக்களை அந்த மாணவிகளுக்கு போட்டு காட்டுவாராம்.. அந்த வீடியோவுடன் காம இச்சைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்தியும் வந்துள்ளார். இதெல்லாம் சேர்ந்துதான், அந்த மாணவிகள் கடும் கோபத்தில் இருந்திக்கிறார்கள். சம்பவத்தன்று அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தரவும் அவர் அலறி வெளியே ஓடிவந்துள்ளார்..

சிங்கப்பெண்
அதற்கு பிறகுதான் மற்ற மாணவிகள், குச்சி, கட்டைகளை எடுத்து கொண்டு வந்துள்ளனர்.. கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் மாணவிகள் திரண்டு வருவதை பார்த்ததுமே, அதிர்ச்சி அடைந்த சின்மய மூர்த்தி, தன்னுடைய ரூம் கதவை மூடிவிட்டார்.. ஆனாலும், மாணவிகள் அந்த கதவை அடித்து நொறுக்கி, இடித்து தள்ளி உள்ளே சென்றுள்ளனர்.. சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.. நான் எந்த தப்பும் செய்யல என்று அந்த தலைமை ஆசிரியர் சத்தம் போட்டாராம்.. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி, "நல்லா போடுங்க..விடாதீங்க" என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் கதறி கதறி அழுதபடியே தன் தோழிகளிடம் ஆவேசமாக கத்தியிருக்கிறார்.. அதற்குபிறகதான் மொத்தபேரும் சேர்ந்து, உருட்டுக்கட்டையாலேயே தலைமை ஆசிரியருக்கு பாடம் நடத்தி உள்ளனர்..
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications