Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு “பகாசூரன்”.. காங்கிரஸின் வலுவான “கை”! திப்பு சுல்தானின் சிஷ்யன் -யார் இந்த சித்தராமையா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மீண்டும் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படும் சித்தராமையாவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அலசுவோம்.

மாமன்னன் திப்பு சுல்தானுடைய அரசின் தலைநகரமான மைசூரை சேர்ந்தவர் சித்தராமையா. குருபா சமூகத்தை சேர்ந்த இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் படித்தார். அதை முடித்துவிட்டு சட்டம் படித்த இவர், வழக்கறிஞராக பயிற்சி பெற்று இருக்கிறார்.

While Karnataka poll are counting let we discuss who is Siddaramaiah?

உயர்கல்வி படிக்கும்போதே அரசியல் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த சித்தராமையா, கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். அன்றிலிருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். மைசூர் தாலுக்கா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், லோக் தளம் கட்சி சார்பில் கடந்த 1983 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அந்த தேர்தலில் மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா அதில் வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து கடந்த 1985 ஆம் ஆண்டு ஜனதா கட்சிக்கு தாவிய சித்தராமையா, அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியை தக்க வைத்தார்.

அதை தொடர்ந்து கடந்து 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சித்தராமையா 2004 ஆம் ஆண்டில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தேர்வானார். கடந்த 2005 ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து சித்தராமையா இடைநீக்கம் செய்யப்பட்டதே, கர்நாடக அரசியலில் அவரை உச்ச அதிகாரத்துக்கே கொண்டு சென்றது.

ஜேடிஎஸ் தலைமை மேற்கொண்ட நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா, 2007 ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து 2 முறை கர்நாடக மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்த அவர், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று அம்மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் முதலமைச்சரான பிறகு கர்நாடகா - தமிழ்நாடு இடையிலான காவிரி நதிநீர் விவகாரத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது, நீர் திறந்துவிடுவது போன்றவற்றில் பிடிவாதம் காட்டினார். அதேபோல் கர்நாடகாவில் திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடியது போன்ற விவகாரங்களால் தேசிய அளவில் கவனம் ஈர்த்தார் சித்தராமையா.

While Karnataka poll are counting let we discuss who is Siddaramaiah?

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட சித்தராமையா, தனது ஆஸ்தான சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் பதாமி தொகுதியில் வென்று சட்டமன்றத்துக்கு சென்றார். இந்த நிலையில் இம்முறை வருணா தொகுதில் போட்டியிட்டு இருக்கும் சித்தராமையா அதில் முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படும் நிலையில், டிஜே சிவக்குமாருக்கும் இவருக்கும் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி உக்கிரம் அடையும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையால் மீண்டும் சித்தராமையா முதலமைச்சர் ஆக்கப்படுவாரா, அல்லது டிகே சிவக்குமார் புதிய முதலமைச்சர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+