கிளர்க் டூ முதல்வர்.. உச்சம் தொட வைத்த எடியூரப்பாவின் உழைப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பூகனகெரே என்ற குக்கிராமம் உள்ளது. திரைப்படங்களில் காண்பது போல், விவசாயம் செழித்தோங்கும் அழகான அந்தக் கிராமத்தில் பிறந்தவர்தான் எடியூரப்பா.
பள்ளி படிப்பை முடித்த பின்பு ஷிமோகாவுக்கு குடிபெயர்கிறார். ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மீது கொண்ட பற்று காரணமாக 1965 முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் எடியூரப்பா. பெரியளவு வசதி இல்லாத குடும்பப் பின்னணி என்பதால், பணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எடியூரப்பாவுக்கு ஏற்படுகிறது.

கல்லூரி படிப்பை ஒரு வழியாக முடித்த கையோடு, கர்நாடக அரசின் சமூக நல வாரிய அலுவலகத்தில் கிளர்க் ஆக பணியில் இணைகிறார். இருப்பினும் அவர் மனதில் இருந்த நெருடல் அவரை பணி செய்யவிடவில்லை. அரசியல் ஆர்வம் காரணமாக அரசுப்பணியை ராஜினாமா செய்த அவர், ஷங்கர் ரைஸ் மில்லில் பணிக்கு சேர்கிறார்.
இரண்டாண்டு காலம் உருண்டோடுகிறது. எடியூரப்பாவின் சுறுசுறுப்பையும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருப்பதையும் உணர்ந்த ரைஸ் மில் முதலாளி வீரபத்ர சாஸ்திரி தனது மகள் மித்ரா தேவியை எடியூரப்பாவுக்கு மணம் முடித்து கொடுக்கிறார். கூடவே மருமகன் பணத்துக்கு சிரமப்படக் கூடாது என்று, ஷிகாரிபுராவில் ஹார்டுவேர் கடை ஒன்றையும் வீரபத்ர சாஸ்திரி அமைத்துக்கொடுகிறார்.
வருமானத்துக்கு குறைவில்லை என்ற நிலை வந்தவுடன் எடியூரப்பாவுக்குள் ஒளிந்திருந்த அரசியல் ஆசை வேர் விட்டு படரத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷிகாரிபுரா நகர செயலாளர் பதவி 1972-ல் எடியூரப்பாவை தேடி வந்தது. 1973-ல் ஷிகாரிபுரா நகராட்சி கவுன்சிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1975-ல் மிசாவில் கைது செய்யப்பட்ட எடியூரப்பா, 45 நாட்கள் பெல்லாரி சிறையில் இருந்தார். அந்த சிறைவாசம் அவரை மேலும் பட்டை தீட்டியது. ஒருவகையில் அவர் அரசியல் வாழ்க்கைக்கு அது திருப்புமுனை.
பின்னர் ஜன சங்கம், ஜனதா கட்சியுடன் இணைக்கப்படுகிறது. 1977-ல் ஷிமோகா பகுதியில் ஜனதா கட்சியை வலுப்படுத்த கடுமையாக, உழைத்ததன் விளைவு, 1983-ல் முதன் முறையாக ஷிகாரிபுரா தொகுதி எம்.எல்.ஏ.வானார் எடியூரப்பா. அதன் பின்னர் தற்போது வரை 7 முறை அந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொகுதிவாசிகளிடம் ஒரு உறவுக்காரரை போல் பழகக்கூடியவர் எடியூரப்பா. ஜனசங்கம், ஜனதா கட்சி எல்லாம் ஒன்றிணைந்து பா.ஜ.க.வாக உருவெடுத்தப் பின்பு அந்தக் கட்சியின் வேட்பாளராக 1985-ல் ஷிகாரிபுராவில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுகிறார். அவருடன் வெற்றி பெற்ற இன்னொருவர் வசந்த் பங்கேரா. பெல்தங்கடி தொகுதியில் இவர் வெற்றி பெறுகிறார். முதல்முறையாக 2 எம்.எல்.ஏ.க்களை பாஜக பெற்றிருந்த நிலையில், வசந்த் பங்கேரா காலப்போக்கில் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.
அதன் பிறகு ஒன் மேன் ஆர்மியாக இருந்தார் எடியூரப்பா. அகில இந்திய தலைமையின் கவனத்தை ஈர்த்த இவருக்கு கட்சிப்பதவிகள் தேடி தேடி வந்தன. கர்நாடகாவில் 1987-ல் கடும் வறட்சி ஏற்பட்ட போது, சைக்கிள் யாத்திரையை தொடங்கி மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து தன்னை மக்கள் அறியும் தலைவராக உயர்த்திக்கொண்டார். இப்படி படிபடியாக உயர்ந்த இவருக்கு முதலமைச்சர் பதவியும் தேடி வந்தது.
தென்றல் வீசிய எடியூரப்பாவின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. நில ஊழல் வழக்கு, சுரங்க வழக்கில் இவர் பெயரும் அடிபட்டது. இந்த வழக்குகளால் கடந்த 2011-ல் முதலமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார். 23 நாட்கள் சிறைவாத்திற்கு பின்னர் வெளியே வந்த எடியூரப்பா, பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு 'கர்நாடக ஜனதா பக்ஷா' (கே.ஜே.பி.) என தனிக்கட்சி தொடங்கினார்.
பின்னர் காலஒட்டத்தில் மனக்கசப்புகளை மறந்து மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களை பெற்றும் ஆட்சியை கோட்டைவிட்ட பாஜக, இப்போது அதை சாதித்துவிட்டது. பொதுவாக பாஜகவில் 75 வயதுக்கு மேல் பதவி அளிக்கப்படாது. கடந்த காலங்களில் கட்சிக்காக உழைத்ததை சீர்தூக்கிப்பார்த்து 76 வயதுடைய எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் ஆக்கியுள்ளது பாஜக தலைமை. அவரும் தனது ஆஸ்தான ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில், வெள்ளியன்று 4-வது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றுகொண்டார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?












Click it and Unblock the Notifications