Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவையே அலற வைத்த ஜெயிண்ட் கில்லர்.. அடித்த 10 பேருமே டான்தான்.. யார் இந்த டிகே சிவக்குமார்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டி.கே சிவக்குமார்.. காங்கிரஸ் மாநில தலைவரான டிகே சிவக்குமார் கடந்த 5 வருடமாக மேற்கொண்ட தேர்தல் பணிகள்தான் அங்கே காங்கிரஸ் வெற்றிபெற மிக முக்கியமாக காரணமாக அமைந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

அங்கு காங்கிரஸின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிகே சிவக்குமார்.. யார் அவர்? அமித் ஷாவையே அலறவைத்தது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

Who is DK Shivakumar and Why he is a big trouble to BJP in Karnataka amid the Assembly election Results?

வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்.. ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்.. இது கர்நாடகாவில் எடுக்கப்பட்ட படமான கேஜிஎப்பில் வரக்கூடிய வசனம். இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதிதான் டி கே சிவக்குமார். இவரை கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்.

அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து அதை தினமும் நிரூபித்துக் கொண்டு வருபவர்தான் டி கே சிவக்குமார்.

இவருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த டி கே சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். 1985க்கு பின்தான் அவரின் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது. கர்நாடகாவின் முக்கிய தொகுதியில் ஒன்றான கனகபுரா தொகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார்.

கடந்த முறை அங்கே தொங்கு சட்டசபை உருவான போது மஜத தலைவர் குமாரசாமியின் ஆட்சியை உருவாக்கவும், ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்றவும் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் இதே மஜத கட்சியின் முக்கிய தலைவர்களை வீழ்த்திதான் அரசியலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆம் மஜத கட்சியின் அனைத்து முக்கியமான தலைவர்களையும் இவர் தனி ஆளாக நின்று வீழ்த்தி உள்ளார்.

1989ல்தான் இவரை எல்லா அரசியல் தலைவர்களும் கவனிக்க தொடங்கினார்கள். எப்படியும் தோல்வி அடைவார் என்று தெரிந்து காங்கிரஸ் கட்சி சிவக்குமாரை சதான்பூர் தொகுதியில் மஜத தேசிய தலைவர் தேவ கவுடாவை எதிர்த்து நிற்க வைத்தது. ஆனால் அப்போது வந்த தேர்தல் முடிவு, இந்திய அரசியலையே உலுக்கியது. ஆம் அந்த தேர்தலில் தேவ கவுடா சிவக்குமாரிடம் படுதோல்வி அடைந்தார்.

அப்போது உருவான ஹீரோதான் டிகே சிவக்குமார். தேவ கவுடாவின் குடும்ப உறுப்பினர்களை தோல்வி அடைய செய்வதுதான் இவருக்கு ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை எளிதாக செய்து முடித்து கெத்து காட்டினார். ஆம் இரண்டு முறை தேவ கவுடாவை வீழ்த்தி இருக்கிறார். அதன்பின் குமாரசாமியை சதான்பூர் தொகுதியிலும், அவரின் மனைவி அனிதா குமாரசாமியை கனகபுரா தொகுதியில் வீழ்த்தி உள்ளார். அப்போதில் இருந்து இவரை கர்நாடக அரசியலில் ''ஜெயிண்ட் கில்லர்'' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்.

அதாவது பெரிய ஆட்களை தேடி தேடி வீழ்த்தி இருக்கிறார்.. இவர் 10 யாரோ பேரை அடித்து டான் ஆகவில்லை. இவர் அடித்த 10 பேருமே டான்தான்.

Who is DK Shivakumar and Why he is a big trouble to BJP in Karnataka amid the Assembly election Results?

இவரின் அரசியல் ராஜ தந்திரங்களுக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் கூறலாம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் டிகே சிவக்குமாரின் சகோதரர் மட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பாஜக உள்ளிட்ட எல்லோரையும் இப்போதும் துரத்திக்கொண்டு இருக்கிறது.

அதேபோல் கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தது டிகே சிவக்குமார்தான். இரண்டு கட்சி எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் வைத்து ஆட்சியை அமைத்து, அமித் ஷாவை அதிர்ச்சி அடைய செய்தது டிகே சிவக்குமார்தான்.

முக்கியமாக கர்நாடகாவில் ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்கள் இருந்த மும்பை ரிசார்ட்டில் தனி ஆளாக போய் சண்டை போட்டார் டிகே சிவக்குமார். அப்போது வரை தென் இந்தியாவில் மட்டும் வைரலாக இருந்த டிகே சிவக்குமார், பாஜகவிற்கு எதிரான தேசிய முகமாக மாறினார். இவரை காங்கிரஸ் தலைவராக மாற்ற வேண்டும் என்று அப்போதே பலர் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அமித் ஷாவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய டிகே சிவக்குமார் இப்போதும் கடும் போட்டியாக பாஜகவிற்கு மாறியுள்ளார்.

கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் பணக்கார அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தன்னிடம் 840 கோடி ரூபாய் மொத்தமாக சொத்தாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எப்போதும் ஹெலிகாப்டரில் பயணிக்கும் இவர், செய்தியாளர்களை சந்திக்க கூட ஹெலிகாப்டரில் வந்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது.

இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பாஜக அரசு பலமுறை ரெய்டு அஸ்திரத்தை இவர் மீது ஏவி இருக்கிறது. ஒரே நாளில் இவருக்கு சொந்தமான 110 இடங்களில் கூட ரெய்டு நடந்து இருக்கிறது. இவர், இவரின் மகள் கூட கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இவரோ ''நான் எப்போதும் ராஜா'' என்று எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார். அதிகமாக கோபம் அடையும் இவர் பலமுறை சட்டசபையிலேயே மோசமான வார்த்தைகளில் கத்தி உள்ளார்.

இவருக்கு எதிராக கிரானைட் ஊழல் வழக்கு, நிறைய முறைகேடு வழக்கு இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் நிரூபிக்க சரியான ஆதாரங்கள்தான் இல்லை. தற்போது இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் அமித் ஷாவை எதிர்க்க கூடிய வலிமை படைத்த ஒரே தலைவர் என்றால் அது கண்டிப்பாக டி கே சிவக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்றதால் அங்கே யார் முதல்வர் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரில் யார் முதல்வர் என்று கேள்வி நிலவி வருகிறது.

அதிலும் இந்த முறை டிகே சிவக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரும் இன்று டெபாசிட் இழந்துள்ளனர்.

சுமார் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தார்.

கனகபுரா தொகுதியில் 1.90 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், சிவக்குமார் மட்டும் 1.43 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்; மஜத 20,631 வாக்குகளும் பாஜக 19,753 வாக்குகளும் பெற்றுள்ளது.

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வருவாய் துறை அமைச்சரான ஆர் அசோகா 19,753 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.

அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், நிர்வாகிகள் பொரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.

இவர்களில் யார் முதல்வராக போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் சப்போர்ட் சித்தராமையாவிற்கும், தொண்டர்கள் சப்போர்ட் டிகே சிவக்குமாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் ஆவதற்கு இரண்டு பேருமே தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். முக்கியமாக டிகே சிவக்குமார் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால் சித்தராமையாதான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+