Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்டர்மைண்ட்.. பாஜகவை திக்கி திணற வைத்து.. காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான "சுனில்".. அட அவரா இது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்; காங்கிரஸ் கட்சியின் இந்த அபார வெற்றிக்கு அவர்களின் முறையான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணம் ஆகும். இதற்கெல்லாம் காரணம் அங்கே காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகோலுதான்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது.

Who is Sunil Kanugolu? The mastermind behind the success of Congress in Karnataka Election?

வெற்றி: அங்கே காங்கிரஸ் கட்சியின் இந்த அபார வெற்றிக்கு அவர்களின் முறையான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணம் ஆகும். களத்தில் மேற்கொண்ட பிரச்சாரம், சமூக வலைதள பிரச்சாரம், முறையாக திட்டமிட்டு காய் நகர்த்தியது, பத்திரிகைகளில் முறையாக விளம்பரம் கொடுத்தது என்று காங்கிரஸ் கட்சி பாஜகவை இந்த தேர்தலில் திக்கி திணற வைத்தது.

இதற்கெல்லாம் காரணம் அங்கே காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகோலுதான். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளை தெரிந்த சுனில் பிரபல அரசியல் ஆலோசகர் ஆவார்.

அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர்.. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற சென்று அங்கு முழு நேர உறுப்பினர் ஆகிவிட்டார். பிரஷாந்த் கிஷோர் போல் இல்லாமல் சுனிலை ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ பார்க்க முடியாது.

காங்கிரஸின் 2024 தேர்தல் பணிக்குழுவின் முக்கிய ,மாஸ்டார்மைன்ட். மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 39 வயதான சுனில் மிகவும் வித்தியாசமானவர். I-PAC இன் பிரஷாந்த் கிஷோரை போல இல்லாமல் இவர் மிகவும் அமைதியானவர், அரசியல் சார்பு அற்றவர். ஆனால் இந்த முறை காங்கிரஸ் உறுப்பினராகவே சேர்ந்து விட்டார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த முறை காங்கிரசுக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ள சுனில் ஏற்கனவே தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். மிகவும் அமைதியான இவர்.. காங்கிரசில் சேர்ந்தது கூட பலருக்கும் தெரியாது.

காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட இவரை பார்த்தது இல்லை. காங்கிரஸ் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பெரும் பகுதியை திட்டமிட்டது, ராகுல் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் செய்தது எல்லாமே சுனில்தான்.

Who is Sunil Kanugolu? The mastermind behind the success of Congress in Karnataka Election?

தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று 2024 வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறார். பிரஷாந்த் கிஷோர் போல இல்லாமல் சுனில் நேரடியாக அனைத்து பணிகளையும் செய்ய கூடியவர். கட்சி நிர்வாகிகளுக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்க கூடியவர்.

2014க்கு முன்பு இவரும் பிரஷாந்த் கிஷோரும் சேர்ந்து பணியாற்றி அதன்பின் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் திமுகவிற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கும் வேலை பார்த்தார். இரண்டிலும் கட்சிகள் தோல்வி அடைந்தாலும் நல்ல இடங்களை பெற்று எதிர்கட்சியானது.

இதில் சுனில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஒரு காலத்தில் ஸ்டாலினின் வீட்டிற்கு அப்பாயின்மென்ட் வாங்காமல் செல்லும் அளவிற்கு நெருக்கமாக இருந்தவர் மனக்கசப்பில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு வேலை பார்த்துவிட்டு அதன்பின் காங்கிரசில் இணைந்தவர் தற்போது ராகுலின் லெப்ட் ஹேண்டாக இருக்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரசின் PayCM , ByeBYeBjp போன்ற பிரச்சாரங்களை இவர்தான் உருவாக்கியது. இவரின் தாயார் தெலுங்கு, அப்பா கன்னடா. ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அமெரிக்கா செல்லும் வரை பெரும்பாலும் சென்னையில் படித்தவர். இளங்கலை பட்டதாரியாக பொறியியல் படித்தார். அவர் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார் - நிதியில் எம்எஸ் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். 2009ல் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்

2014 வரை பிரசாந்த் கிஷோருடன் பணியாயற்றியவர்.. 2018 - 19ல் சில காலம் அமித் ஷாவிற்காக டெல்லியில் தேர்தல் பிரச்சாரங்களை கவனித்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட சுனில் வகுத்த பிரச்சார யுக்திகள், பாரத் ஜோடா யாத்திரை திட்டங்கள்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற மிக முக்கிய காரணமாக மாறி உள்ளது.

வைத்து.. பிற சாதிகளுக்கு.. பிற தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

அதேபோல் லிங்காயத்து பிரிவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.

இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு தேர்தலுக்கு முன்பாக சரியாக சென்றார்.

பாஜகவை மிரட்டும் ஒரு ஜாதி: கர்நாடகாவில் லிங்காயத்துகள் மிகவும் வலிமையான ஜாதி பிரிவினர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர். அங்கே இருக்கும் பெலகாவி, தார்வாட் மற்றும் கடக் மாவட்டங்களில் அவர்கள் அதிகம் உள்ளனர்.

அதேபோல் அவர்கள் பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார் மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+