முதல்வருக்கே தெரியாதாம்! ஆர்சிபி அணியால் ஏற்பட்ட 11 பலி.. அவசரமாக விழா நடத்த சொன்ன கருப்பு ஆடு!
பெங்களூர் : பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்க உண்மையில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வருக்கே தெரியவில்லை
முதல்வர் சித்தராமையா.. இந்த சம்பவம் குறித்து தனக்கே மிக தாமதமாக தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதாவது 11 பேர் மரணம் பற்றி தனக்கே உடனுக்குடன் தெரிவிக்கப்படவில்லை. அங்கே இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார். இதன் காரணமாக உளவு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

யாரோ தந்த அழுத்தம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தை அவசர அவசரமாக நடத்த வேண்டாம் என்றும், ஒரு வாரம் கழித்து நடத்தலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆர்சிபி நிர்வாகம் அதை கேட்கவில்லை. திட்டமிட்டபடி எப்படியாவது அந்த நிகழ்ச்சியை நடத்தியே தீர வேண்டும் என்று "அரசியல் அழுத்தம்" கொடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கும், காவல்துறைக்கும் சில புள்ளிகள் வழியாக ஆர்சிபி அணி அழுத்தம் கொடுத்ததாம். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "ஆர்சிபி அணியின் முக்கிய சில தலைகள்தான் இந்த குளறுபடிக்கு முக்கிய காரணம். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அவர்கள்கூட எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரின் கருத்தை கூட ஆர்சிபி ஏற்கவில்லை. போலீஸ் திட்டமிடுவதற்கு போதிய அவகாசம் இல்லை" என்றார்
பிசிசிஐ கூட தெரியாது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு கூட இந்த பேரணி பற்றி தெரியவில்லை. அதாவது பிசிசிஐ அமைப்பிடம் இதை பற்றிய அனுமதி வாங்கப்படவில்லை.
அரசிடமும் முறையாக அனுமதி பெறப்படவில்லை. மேலும், "காவல்துறையினர் இரவு வரை விழித்திருந்து அந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கான வேலைகளைச் செய்தனர். ஒவ்வொரு காவலரும் இரவு 4 மணி வரை வேலையில் இருந்தனர். மதியத்திற்குள் எப்படி எல்லாவற்றையும் தயார் செய்ய முடியும்? இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிக்கு, நாங்கள் மாதிரி மதிப்பீடு செய்வோம். ஆனால், இந்த முறை எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் இருந்திருந்தால், நாங்கள் இதைத் முறையாக செய்திருக்க முடியும்" என்று கர்நாடகா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
கருப்பு ஆடு யார்?
அப்படி என்றால் அரசுக்கு தெரியாமல், முதல்வருக்கு தெரியாமல், பிசிசிஐ அமைப்பிற்கே தெரியாமல், இந்த பேரணியை அவசரமாக நடத்த அழுத்தம் தந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அதிக பவர் கொண்ட கருப்பு ஆடு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலிதான் இந்த விழா முடிந்து அவசர அவசரமாக லண்டனுக்கு சென்றார்.
கோலி அவசர அவசரமாக லண்டன் செல்வதற்காக இந்த விழா நடத்தப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு வருவதால் கோலி விசாரிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நைஜா ஹொரட்டகாரரா வேதிகே அமைப்பின் பிரதிநிதியாக ஏ.எம். வெங்கடேஷ் என்பவர் கபன் பூங்கா காவல் நிலையத்தில் அவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் (FIR) சேர்த்து இந்த புகாரும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications