பந்திப்பூர் காட்டில்.. மோடியுடனே இருந்த அந்த "தமிழ் ஐஎப்எஸ்".. யார் தெரியுமா? அசத்தல் பின்னணி!
பெங்களூர்: பந்திப்பூர் காட்டுப்பகுதியில் பிரதமர் மோடி சபாரி சென்ற போது, பிரதமருடன் ஒரு அதிகாரி இருந்தார். அவர் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். யார் இந்த அதிகாரி என்று பலரும் அவரை பற்றி தேட தொடங்கி உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இடையில் பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு அதிகம் பயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அங்கு பாஜகவிற்கு எதிராக தேர்தல் முடிவுகள் வரலாம் என்று கருத்து கணிப்புகள் சொல்வதால், பிரதமர் மோடி தீவிர களப்பணிகளை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துஉள்ளார்.
இந்த பயணம் முடித்து மறுநாள் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கர்நாடகா - கேரளா எல்லையில் இருக்கும் பந்திப்பூர் காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கே அவர் ஜங்கிள் சபாரி மேற்கொண்டார். அதோடு வனப்பகுதியில் விலங்குகளையும், மரங்களையும், பறவைகளையும் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்வில் காட்டில் இருக்கும் போட்டோகிராபர் போல தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு ஜீப்பில் பயணம் மேற்கொண்டார். 22 கிமீ தூரத்திற்கு பிரதமர் மோடி காட்டிற்குள் சென்றார். அங்கே பல விலங்குகளை பார்த்தார். யானைகள், மான்கள், பல்வேறு பறவைகளை பார்த்தார். இந்த நிகழ்வு முழுக்க பிரதமர் மோடியோடு ஒரு அதிகாரி இருந்தார். அவர் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். யார் இந்த அதிகாரி என்று பலரும் அவரை உற்று பார்த்தனர்.
அவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரி ரமேஷ்குமார்தான் பிரதமர் மோடியை இங்கே முழுக்க முழுக்க வழி நடத்தியது. அவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார் இவர். பந்திப்பூர் புலிகள் சரணாலய பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். இவர்தான் அந்த பயணம் முழுக்க பிரதமர் மோடிக்கு பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.
அவரை பற்றி பிரதமர் மோடி தனிப்பட்ட விவரங்களையும் கேட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 30 யானைகளையும், 250 மான்களையும் அவர் பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டி உள்ளார்.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications