இரவில் "அது" கிட்டயே உட்கார்ந்திருந்த நபர்... பெங்களூர் இந்திரா நகர் அப்பார்ட்மென்ட்டில் யாரந்த பெண்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அப்பார்ட்மென்ட்டில் நடந்த சம்பவம், அந்த பகுதி மக்களை வெலவெலக்க செய்து வருகிறது.. இந்திரா நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்ற இளைஞர் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

பெங்களூரை பொறுத்தவரை, ஹைடைக் சிட்டியாக உள்ளது.. இதனால், ஏராளமான ஐடி கம்பெனிகள் பெங்களூருவில் புற்றீசல்போல முளைத்தபடியே உள்ளது.. இதனால், இந்தியாவின் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பெங்களூரை நோக்கி படையெடுத்தவாறே உள்ளனர். இதில், வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்ல.

bangalore kerala

அசாம் பெண்: இப்படி பெங்களூர் வரும் இளைஞர்களும், இளம்பெண்களும், தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சேர்ந்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்... அந்தவகையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகோய் என்ற இளம்பெண் ஒருவர், பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். எனவே, இதே இந்திரா நகர் பகுதியில், ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருக்கிறார்.

இந்த பெண்ணுக்கு ஆரவ் என்ற கேரள மாநில இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பானது, இருவருக்கும் காதலாக உருவெடுத்துள்ளது.. ஆனால், கடந்த சில மாதங்களாகவே, இவர்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.. எனவே, அடிக்கடி தகராறும், சண்டையுமாக வந்துள்ளது.

காதல் ஜோடி: இப்படித்தான் கடந்த 23ம் தேதி, மாயாவின் இந்திரா நகர் வீட்டில், ஆரவ் தங்கியிருந்திருக்கிறார்.. அப்போது, காதல் ஜோடி இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஆரவ், திடீரென கத்தியை எடுத்துவந்து, மாயாவின் மார்பிலேயே கொடூரமாக குத்தினார்.. இதில் நிலைகுலைந்த மாயா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து, மாயாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது.. அப்பார்ட்மென்ட் வீடு என்பதால், அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அனைவருமே இதுகுறித்து, சந்தேகம் அடைந்து, இந்திரா நகர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்..

விசாரணை: உடனடியாக போலீசாரும், மாயாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே யாருமே இல்லாமல், மாயாவின் சடலம் மட்டும் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இதையடுத்து, மாயாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்து, விசாரணையையும் துவங்கினார்கள். அப்போதுதான், ஆரவ் என்பவரின் பெயர் அடிபட்டது..

சம்பவத்தன்று இவர்தான் மாயாவின் வீட்டுக்கு வந்துள்ளதும் உறுதியானது. ஆனால், அவர் 2 நாட்களுக்கு முன்பேயே மாயாவை கொலை செய்துவிட்ட நிலையில், சடலத்தை என்ன செய்வது ? எங்கே கொண்டு போய் போடுவது? என தெரியாமல் குழம்பியிருக்கிறார்.. எனவே, அதே வீட்டிலேயே ஒரு நாள் முழுவதும் சடலத்துடனேயே தங்கியிருக்கிறார்.

bangalore kerala

வாடகை கார்: சடலத்தை கூறு கூறாக வெட்டி, எங்காவது கொண்டுபோய் வீசிவிடலாமா? என்று யோசித்துள்ளார்.. பிறகு அந்த ஐடியா சரிவராது என்று நினைத்து அதனை கைவிட்டுள்ளார்.. பிறகு, கேரளாவிலிருந்து கார் ஒன்றை வாடகைக்கு புக் செய்துகொண்டு, அந்த காரில் ஏறி தப்பி சென்றுள்ளார்.. இதனால், கடந்த 2 நாட்களாகவே சடலம் வீட்டிற்குள் கிடந்ததால், துர்நாற்றம் வீசியிருப்பது தெரியவந்தது.. இப்போது ஆரவ் எங்கே என்று தெரியவில்லை.. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து துணை கமிஷனர்(கிழக்கு) தேவராஜ் சொல்லும்போது, "பெங்களூரு இந்திரா நகரில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். கொலை செய்யப்பட்ட பெண், அசாமை சேர்ந்த மாயா கோகாய்.. 22 வயதாகிறது..

சிசிடிவி காட்சி: இவருடன் கேரளாவை சேர்ந்த ஆரவ் ஹர்னி என்பவர் தங்கியிருக்கிறார்.. ஆனால், அவர் கடந்த நவம்பர் 24ம் தேதி மாயாவை கொன்றுவிட்டு இன்று அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. கோரமங்களாவில் பணிபுரிந்த மாயா, நவம்பர் 23ம்தேதி, அந்த நபருடன் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.. ஆனால், மறுநாள் அதாவது நவம்பர் 24ம் தேதியே மாயா கொல்லப்பட்டதாக தெரிகிறது.

எனவே, அந்த பெண்ணுடன் சிசிடிவியில் காணப்பட்ட அந்த நபரே, இந்த குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கிறோம்... அவர் வீட்டிலிருந்து தப்பிச்செல்லும் வரை இறந்தவர் உடலுடன் ஒரே அறையில் தங்கியிருந்திருக்கிறார். சந்தேகிக்கப்படும் நபர் எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

50 துண்டுகள்: சமீப காலமாகவே, பல்வேறு பயங்கர சம்பவங்கள் பெங்களூரில் நடந்து கொண்டிருக்கின்றன.. இப்படித்தான் கடந்த செப்டம்பர் 3ம் தேதி, இதே பெங்களூருவில் மகாலட்சுமி என்ற 29 வயது பெண் அவரது காதலனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.. அவரது சடலம் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு, அவரது வீட்டிலுள்ள ஃபிரிட்ஜிலேயே வைக்கப்பட்டிருந்தது. இப்படி வெளிமாநிலங்களிலிருந்து பெங்களூரில் தங்கி வேலை பார்க்கும் இளம்பெண்கள், அவரவர் காதலன் உள்ளிட்டோராலேயே தொடர்ந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவது பெங்களூரை கதிகலங்க வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+