அண்ணி சொல்லியும் கேக்கல.. அண்ணன் மன்றாடியும் அடங்கல.. தத்தளித்த தம்பி.. ஒரு நொடியில் இந்த முடிவு
பெங்களூரு: புத்தி தடுமாறியதால், ஒருகொலை வரை சென்றிருக்கிறது.. கர்நாடகாவில் அப்படியென்ன நடந்தது?
கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் உள்ளது சவுடஹள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பிரசாத்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவரது தம்பி குமார்.. இவருக்கு 39 வயதாகிறது.

அண்ணனுக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே, அண்ணி மீது குமாருக்கு ஒரு கண் இருந்து வந்ததாம்.. புத்தி தடுமாறியதில், தீராத மோகம் கொண்டுள்ளார்.. இதனால், அண்ணி என்றும் பாராமல், அடிக்கடி தகாத உறவுக்கு குமார் அழைத்து வந்துள்ளார்..
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணி, தன்னுடைய கணவர் பிரசாத்திடம் இதை பற்றி முறையிட்டுள்ளார். பிரசாத்தும், தன்னுடைய தம்பியை கண்டித்திருக்கிறார்.. ஆனால், குமார் எவ்வளவு புத்தி சொல்லியும் கேட்காமல் அடங்கவில்லையாம்.. மறுபடியும் மறுபடியும் அண்ணியை தகாத உறவுக்கு வற்புறுத்தியதால், சகோதரர்களுக்குள் தகராறும், அடிதடியும் ஏற்பட்டு வந்துள்ளது.
குற்றச்சாட்டு: நேற்றிரவும் இப்படி ஒரு தகராறு வெடித்திருக்கிறது.. அப்போது குமார் தன்னுடைய அண்ணனிடம், "உன் மனைவி யோக்கியமா? இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறாரே" என்று குற்றம் சாட்டியுள்ளார்.. இதைக்கேட்டதும், அண்ணன், தம்பிக்கு இடையே மறுபடியும் அடிதடி மோதல் ஏற்பட்டது..
அப்போது ஆத்திரமடைந்த குமார், கத்தியால் தன்னுடைய அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.. இந்த கொலை குறித்த தகவல் அறிந்த குண்டலுப்பேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.. அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரசாத் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு: அண்ணனை கொலை செய்த குமாரை போலீஸார் கைது செய்தனர்... இந்த சம்பவம் சவுடஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications