கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர்? ட்விஸ்ட் வைத்த டிகே சிவக்குமார்! அப்போ சித்தராமையா?
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் யார் முதல்வர் என்ற கேள்விக்கு டிகே சிவக்குமார் ட்விஸ்டுடன் பதிலளித்து பரபரப்பை கூட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல் நேற்று ஒரே கட்டமாக 224 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட சற்று அதிகமாகும். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் இழந்த அதிகாரத்தை கைப்பற்ற துடித்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தன. அதாவது பல கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக இந்திய டுடே கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக இந்த கருத்து கணிப்பில் பாஜக 67 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 25 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 3 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் உறுதியாகி உள்ளனர். அதேவேளையில் பாஜகவும் நம்பிக்கையை இழக்கவில்லை. கருத்து கணிப்பை தாண்டி பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா இடையே போட்டி உள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரிடம் இத்தகைய கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டிகே சிவக்குமார், ‛‛கர்நாடகா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். கர்நாடகா மக்கள் அமைதியான மாநிலத்தையம் அதேநேரத்தில் வளர்ச்சி, மேம்பாட்டையும் விரும்புகின்றனர். இதற்காக தான் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி நிச்சயமாக இந்த தேர்தலில் 141 இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுகள் மே 13ல் வெளியாக உள்ளது. இந்த வேளையில் ரிசல்ட் வந்த பிறகு தான் முதல் அமைச்சர் என்பது முடிவு செய்யப்படும் '' என்றார். இதன்மூலம் டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவியை குறிவைத்துள்ளது உறுதியாகி உள்ளது.
முன்னதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில் ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையான பழைய மைசூர் மாவட்டங்களில் அந்த கட்சியை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது பழைய மைசூர் மாவட்டங்களில் உள்ள 62 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 18 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் மற்றவர்கள் 3 இடங்களிலும் வெல்வார்கள் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மாவட்டங்களில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் தான் அதிகமாக வசிக்கின்றனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். இதனால் தான் எப்போதும் ஜேடிஎஸ் கட்சிக்கு இங்கு அதிக இடங்களை கைப்பற்றும். அதேவேளையில் ஒக்கலிகரான காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் இந்த முறை பழைய மைசூர் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தினார். காங்கிரஸ் கட்சி வென்றால் முதல்வர் வாய்ப்புக்கு தனக்கு கிடைக்கும் என்பதை நிர்வாகிகளிடம் கூறி வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் தான் பழைய மைசூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைப்பதாக இந்திய டுடே கருத்து கணிப்பு கூறிகிறது. அதன்படி பார்த்தால் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக அங்குள்ள மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ரிசல்ட்டிலும் எதிரொலித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலையில் டிகே சிவக்குமார் முதல் அமைச்சர் பதவிக்காக நிச்சயம் சித்தராமையாவுடன் மல்லுக்கட்டுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications