Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் பாஜகவை கதறவிட்ட.. 8 பிஸ்லெரி பாட்டில்களும்.. 1 கல்யாணமும்.. தோற்ற அமித் ஷா வியூகம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அங்கே பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்து உள்ளார்.

அவர் காங்கிரசில் இணைந்தது பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

"நான் கர்நாடகாவில் பாஜகவை கட்டி எழுப்பினேன். ஆனால் இப்போது பாஜகவில் என்னையே ஓரம் கட்டிவிட்டார்கள். மூத்த தலைவர்களான என்னை போன்றவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டனர். பாஜக கொடுத்த எல்லா பொறுப்புகளிலும் நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். எல்லா தேர்தல்களிலும் புதிய ரெக்கார்ட் படைக்கும் அளவிற்கு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளேன்.

Why Amit Shah is playing a wrong game in Karnataka? Why Jagadish Shettar will cause huge damage to BJP?

ஆனால் இனியும் பாஜகவில் நான் இருக்க முடியாது. என்னுடைய சுயமரியாதையை இழந்துவிட்டு இனிமேலும் பாஜகவில் இருக்க முடியாது. 7வது முறையாக ஹுப்பாலி-தர்வாடில் நான் வெற்றிபெறுவேன். இது நிச்சயம்", என்று கூறிவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளார் அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

இவர் முன்னாள் முதல்வர் என்பதை தாண்டி நீண்ட கால பாஜக உறுப்பினர்.. அடிப்படை ஆர்எஸ்எஸ்வாதி. இவரின் அப்பா எஸ்எஸ் ஷெட்டர் 5 முறை பாஜக சார்பாக ஹுப்பாலி-தர்வாடில் பகுதியில் கவுன்சிலராக ஜன சங்கம் சார்பாக இருந்தவர்.

இவரின் மாமா சதாசிவ ஷெட்டர் ஜன சங்க காலத்தில் 1967ல் ஹுப்பாலி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.

ஹுப்பாலி-தர்வாடில் சிறு வயதில் இருந்த பாஜக மீதான ஆர்வம் காரணமாக ஏபிவிபி.. ஆர்எஸ்எஸ்.. ஜன சங்கம்.. பாஜக என்று வளர்ந்தார். 1994ல் இவர் பாஜக சார்பாக எம்எல்ஏவாகவும் தேர்வானார். 2008ல் ஹுப்பாலி-தர்வாடில் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்தே அதன் எம்எல்ஏவாக ஷெட்டர்தான் இருந்தார்.

லிங்காயத்து தலைவரான இவருக்கு அங்கே மீண்டும் சீட் கொடுக்க பாஜக மறுத்த நிலையில்தான் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த அவர் காங்கிரசில் இணைந்து உள்ளார்.

லிங்காயத்து:பாஜகவில் வரிசையாக லிங்காயத்து தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். அங்கே தேர்தலை தீர்மானிக்கும் லிங்காயத்து பிரிவை ஏற்கனவே பகைத்து பாஜக கடந்த சட்டசபை தேர்தலுக்கும் முந்தைய தேர்தலான 2013 தேர்தலில் பெரிய பாடம் கற்றது.

எடியூரப்பாவை ஒதுக்கி.. எடியூரப்பா தனி கட்சியே தொடங்கி லிங்காயத்து வலிமையை பாஜகவிற்கு காட்டினார்.

இந்த முறை மீண்டும் லிங்காயத்து தலைவர்களை பாஜக ஒதுக்கி உள்ளது. எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் பணிகளோடு அவர் ஓரம்கட்டப்பட்டு உள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தற்போது காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.

இப்போது இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு சென்றுள்ளார்.

Why Amit Shah is playing a wrong game in Karnataka? Why Jagadish Shettar will cause huge damage to BJP?

ஒரு திருமணம்:அங்கே லிங்காயத்து பிரிவினர்.. எந்த கட்சியாக இருந்தாலும் திருமண ரீதியாக உறவு வைத்துக்கொள்வார்கள். அந்த வகையில் ஷெட்டரின் மகனுக்கும் அங்கே காங்கிரசின் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவின் மகன் வழி பேத்திக்கு திருமணம் நடந்தது.

இரண்டு பேருமே லிங்காயத்து வீர சைவா பிரிவை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் நெருக்கம் அடைந்தனர். இந்த திருமண உறவும் சாமனூர் சிவசங்கரப்பா மேற்கொண்டு முயற்சியும்தான் ஷெட்டர் காங்கிரஸ் வர காரணம் என்கிறார்கள்.

அந்த திருமண உறவால் இவர் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் ஆனார். முக்கியமாக தனது வைரி.. சக லிங்காயத்து எம்பி பாட்டிலுடன் நெருக்கம் ஆனார்.

அந்த திருமணம்தான் கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

பிஸ்லெரி பாட்டில்:சித்தராமையாவை காலம் முழுக்க எதிர்த்த ஷெட்டர்.. நேற்று அவரின் அருகில் அமர்ந்து கொண்டு.. 8 பிஸ்லெரி பாட்டில் சகிதம் நீண்ட நேரம் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பேச்சின் முடிவில் அவர் காங்கிரசில் இணைவதாகவும், ஹுப்பாலி-தர்வாடில் மத்திய தொகுதியில் போட்டியிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

காலம் முழுக்க சித்தராமையாவை எதிர்த்த ஷெட்டர்.. பாஜகவின் ஷட்டரை சாத்திவிட்டு காங்கிரசில் இணைந்து இருப்பது அமித் ஷாவின் அரசியல் தவறாகவும் பார்க்கப்படுகிறது. அங்கே தேவையின்றி லிங்காயத்துகளை அவர் பகைத்துக்கொள்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் முன்னொரு காலத்தில் செய்த தவறை இங்கே அமித் ஷா செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Why Amit Shah is playing a wrong game in Karnataka? Why Jagadish Shettar will cause huge damage to BJP?

குஜராத் தவறு :குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதிலும் அங்கு கடந்த 6 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர். ஆம்.. பட்டிதார் இன மக்கள்தான் அங்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி. பாஜக குஜராத்தை கோட்டையாக வைத்து இருப்பதும் அப்படித்தான். அங்கு கடந்த 6 முதல்வர்களின் 5 முதல்வர்கள் பட்டிதார் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக உள்ள 182 இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

இதனால்தான் அங்கு பட்டிதார் தலைவர் ஹர்திக் பட்டேலை பாஜக தேர்தலுக்கு முன் வளைத்தது. தேர்தல் முடிவிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அங்கு பட்டிதார் ஆதரவு காங்கிரஸ் வசம்தான் இருந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார்.

இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அங்கு பாஜக வளர்ந்து, பட்டிதார் உதவியுடன் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து வருகிறது.

அப்போது மாதவ் சிங் செய்த தவறை.. இங்கே கர்நாடகாவில் அமித் ஷா செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+