Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 வருஷம் கப் அடிக்க காத்திருந்தோம்! சில உயிர்கள் போகத்தான் செய்யும்! ஆர்சிபி ரசிகரின் திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலியானது தொடர்பாக ஆர்சிபி ரசிகர் ஒருவர் செய்த போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிலைமை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வில் பல ரசிகர்கள் பலியாகியுள்ளனர். தற்போது வரை 11 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

RCB ipl 2025 2025

இந்த கொண்டாட்டத்தில் மக்கள் பலியானது தொடர்பாக ஆர்சிபி ரசிகர் ஒருவர் செய்த போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. நாங்கள் 18 வருஷம் கப் அடிக்க காத்திருந்தோம்.. அது சில உயிர்களை காவு வாங்கி உள்ளது. சில உயிர்கள் போகத்தான் செய்யும்.. என்று ஆணவமாக பேசி உள்ளார். ஒரு கிரிக்கெட் வெற்றியை சாதாரணமாக கொண்டாடாமல், திருவிழா போல அரசே கொண்டாடியதன் விளைவாக இந்த மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. அதிலும் கடந்த சில நாட்களாகவே ஆர்சிபி ரசிகர்கள் பொது இடங்களில் அடாவடி தனமாக, ஒழுக்கம் இன்றி கொண்டாடியதன் விளைவு நிலைமை மோசமாக காரணமாகிவிட்டது.

ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாமல் கூறியது, கடுமையாக சாலைகளில் அடாவடித்தனமாக கொண்டாட்டங்களை மேற்கொண்டது, விதிகளை மதிக்காமல் கொண்டாடியது, போலீஸ் விதித்த கட்டுப்பாடுகளை மீறியது ஆகியவை அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. மும்பை, சென்னை போன்ற அணிகள் 10 கோப்பைகளை வென்ற போது நடக்காத இது போன்ற சம்பவம்.. பெங்களூர் அணி வென்ற முதல் கோப்பையிலேயே நடந்து உள்ளது.

மரணத்திற்கு முக்கியமான காரணம்

அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். நான் இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. நான் மைதானத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய ரசிகர்கள் உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்... நாங்கள் 5,000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம், என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.


மெட்ரோ ரயில் நிலையங்களில் நெரிசல்

சின்னசாமி ஸ்டேடியத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் வந்தவர்களின் எண்ணிக்கையும் கவனிக்கப்படாமல் போனது. மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையை நிர்வாகம் சரியாக கையாளவில்லை. கூட்ட நெரிசலுக்கு பிறகு, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் (BMRCL) விதான் சவுதா, கியூபன்பார்க் (சின்னசாமி ஸ்டேடியத்துடன் நேரடியாக இணைக்கும்), எம்.ஜி.ரோடு ஆகிய மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது.

ஸ்டேடியத்திற்கு சாலை வழியாகவும், மெட்ரோ ரயில் வழியாகவும் செல்ல முடியும். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதிகாரிகள் கூறுகையில், எதிர்பார்த்ததை விட அதிகமான பயணிகள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.

கபன் பார்க் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலை பிடிக்க முடியாத பயணி ஒருவர் கூறுகையில், "ரயில்களில் மக்கள் நெருக்கமாக நின்றார்கள்," என்றார். மூத்த BMRCL அதிகாரி கூறுகையில், "பயணிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும், மேலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் தற்காலிகமாக சேவையை நிறுத்தி உள்ளோம்," என்றார்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் குவிந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்று பெங்களூர் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+