எடியூரப்பாவின் கண்ணீர் சும்மா விடுமா? பாஜக தோல்விக்கு பிஎல் சந்தோஷ் தான் காரணம்! ஷெட்டர் ஓபன் டாக்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து பாஜக ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு ஒருவர் தான் காரணம் என முக்கிய புள்ளியை சுட்டிக்காட்டி இருப்பது பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. பாஜக மொத்தம் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வாகை சூடியுள்ளனர்.
இந்த தேர்தலில் பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இவர் உப்பள்ளி -தார்வார் சென்ட்ரல் தொகுதியில் 6 முறை தொடர்ந்து வென்ற நிலையில் போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை.

இதனால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டார். இருப்பினும் உப்பள்ளி-தார்வார் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கினகாயிடம் சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார். இருப்பினும் ஜெகதீஷ் ஷெட்டரால் வட கர்நாடகா மாநிலங்களில் லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்கு கிடைத்தது.
இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று பெங்களூரில் ஜெகதீஷ் ஷெட்டர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
லிங்காயத் மக்கள் எப்போதும் பாஜகவின் பக்கம் நிற்பார்கள். ஆனால் இந்த முறை வட கர்நாடகா லிங்காயத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். லிங்காயத் தலைவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அதனை லிங்காயத் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். என்னை பாஜக அவமானப்படுத்தியது. இதனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தேன்.
பாஜகவில் எனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்தேன். பாஜக தலைவர்கள் என்னை அவமானப்படுத்தினர். பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் கட்சிக்குள் இருக்கும் லிங்காயத் தலைமையை பலவீனப்படுத்த விரும்பி அதனை செய்துள்ளார். இதனால் தான் கர்நாடகாவில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியில் லிங்காயத் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 46 பேர் போட்டியிட்ட நிலையில் 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவில் 69 பேர் களமிறங்கிய நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே ஜெயித்துள்ளனர். லிங்காயத் தலைவர்களான என்னையும், எடியூரப்பாவையும் அவமானப்படுத்தியதற்கான விலையை தற்போது பாஜக கொடுத்துள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து நீக்கியபோது எடியூரப்பா சிந்திய கண்ணீர் பாஜகவை சும்மா விட்டு விடுமா? கர்நாடகா முதல்வராக எடியூரப்பா இருந்தார். அவரை 2 ஆண்டுக்கு பிறகு ராஜினாமா செய்ய கூறியது ஏன்? அவரை ஏன் முழுமையாக முதல்வர் பதவியை தொடர விடவில்லை?. அதாவது மாநிலத்தில் பாஜகவில் உள்ள பலம்வாய்ந்த தலைவர்களை ஒதுக்கி கட்சியை பலவீனப்படுத்துவது தான் இதன் நோக்கம்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எப்போதும் கண்களை திறந்து வைத்துள்ளனர். லிங்காயத் தலைவர்களை பாஜக அவமானப்படுத்தியதை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இப்போது என்னுடன் இருக்கிறது. முதல்வர் தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது. அதற்கு பிறகு அமைச்சர் பதவி குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அதற்கு பொறுத்திருக்க வேண்டும்'' என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications