பாஜகவை அப்படியே லெப்ட் ஹேண்டில் புறந்தள்ளிய.. கர்நாடக கிராம தொகுதிகள்.. 7 அசர வைக்கும் காரணங்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் நகரப்பகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றாலும் கிராம பகுதிகளில் காங்கிரஸ் கட்சிதான் முன்னிலை வகித்து உள்ளது. 120 இடங்களில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக தோல்வி:
அங்கே காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து உள்ளது. 120 இடங்களை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அங்கே நகரப்பகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றாலும் கிராம பகுதிகளில் காங்கிரஸ் கட்சிதான் முன்னிலை வகித்து உள்ளது.
47 சிட்டி - நகரப்பகுதிகளில் பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
26 டவுன் - நகர்ப்பகுதிகளில் 11 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 10 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மஜத 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
151 கிராமப்பகுதிகளில் 86 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 38 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மஜத 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதில் கிராம சட்டசபை தொகுதிகளில்தான் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கிறது. பெரும்பாலும் கிராம பகுதிகளில் காங்கிரசுக்கு அதிக ஆதரவு மக்கள் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
பாஜகவின் இந்த கிராமப்புற தோல்விக்கு முக்கிய காரணமாக பின் வரும் விஷயங்கள் பார்க்கப்படுகின்றன.
1.விலைவாசி உயர்வு
2.மத பிரச்சனை.
3. உள்ளூர் பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாது.
4. அடிப்படை வசதி இல்லாதது.
5. பாஜக எம்எல்ஏக்கள் - அமைச்சர்களின் செயல்பாடு.
6. நந்தினி உள்ளிட்ட மாநில பிரச்சனைகள்.
7. காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்;.
வாக்குறுதி :
தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் 4 முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டு உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது.
அதன்படி
1. க்ருஹ ஜோதி திட்டம்: இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்.
2. க்ருஹ லக்ஷ்மி திட்டம்: இந்த திட்டம் மூலம் 2000/மாதம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம்.
3. யுவ நிதி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3,000 & வேலையில்லாத டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு ₹1500/மாதம் வழங்கப்படும் திட்டம்.
4. அன்ன பாக்யா: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications