அலறும் கர்நாடகா.. 14 பள்ளி மாணவிகள் கைகளை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு.. பின்னணியில் ஷாக் தகவல்!
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கம் 14 மாணவிகளின் இடது கைகளில் வெட்டுக்காயம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னணியில் இருக்கும் ஷாக் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டம் தாண்டேலியில் தனியார் பள்ளி உள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த பள்ளி செயல்பட்டது. பொதுவாக சனிக்கிழமை பள்ளி என்பது மதியம் வரை மட்டுமே செயல்படும். மதியத்துக்கு மேல் பள்ளி செயல்படாது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமையும் பள்ளி வழக்கம்போல் மதியம் வரை செயல்பட்டது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றனர். இந்த வேளையில் தான் சில மாணவிகளின் இடது கைகளில் வெட்டுக்காயங்கள் இருப்பதை அவர்களின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதாவது 9 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் 14 மாணவிகளின் கைகளில் பிளேடால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. சிலரது கைகளில் 14 முதல் 15 வெட்டுக்காயங்கள் இருந்தன. குறிப்பாக அனைவரின் இடது கைகளிலும் மணிக்கட்டுக்கு மேலே இந்த வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் அவர்களை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது மாணவிகள் அங்கு நலமாக இருக்கின்றனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஒரே பள்ளியில் பயிலும் 14 மாணவிகளின் கைகளில் ஒரே நாளில் வெட்டுக்காயங்கள் இருந்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் அலர வைத்தது. மேலும் இந்த காயம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
அதாவது Blue Whale கேம் போன்று ஏதேனும் விளையாட்டை விளையாடி டாஸ்க் செய்வதாக கூறி மாணவிகள் தங்களின் கைகளை வெட்டினார்களா? இல்லை இந்த வெட்டுக்காயத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் விஷயம் இருக்கிறதா? என அவர்கள் விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியானது.
அதாவது 14 மாணவிகளும் மனஅழுத்தத்தாலும், வருத்தங்களாலும் கைகளை பிளேடால் வெட்டியதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் மனஅழுத்தத்தில் இருந்தததாகவும், அவர்கள் அனைவரும் தங்களை தானே காயப்படுத்தும் நோக்கத்தில் கைகளை வெட்டிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி தாண்டேலி போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பீமண்ணா சூரி கூறுகையில், ‛‛இந்த மாணவிகள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக தங்களின் கைகளை தாங்களே பிளேடால் கீறியுள்ளனர். மாணவிகளிடம் விசாரித்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை தெரிவித்துள்ளனர்.
மாணவி ஒருவர் தனது தாயை கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் மனம் உடைந்து கையை வெட்டியதாக தெரிவித்துள்ளார். இன்னொரு மாணவி உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்த நிலையில் துக்கம் தாங்காமல் கையை கீறியதாகவும் மறறொருவர் தனது தோழி தன்னிடம் பேசாமல் இருப்பதால் கையை கீறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்'' என்றார்.
இதன்மூலம் மாணவிகள் சிறிய காரணங்களுக்கான மனஅழுத்தம் ஏற்பட்டு கைகளை பிளேடால் வெட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கார்வார் எஸ்பி விஷ்ணுவர்தன் கூறுகையில், ‛‛போலீஸ், கல்வி, சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மீட்டிங் நடத்தி உள்ளோம். முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளோம். தற்போது அனைத்து மாணவிகளும் நலமாக உள்ளனர்'' என்றார். இந்த சம்பவம் கர்நாடகாவில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications