Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த "எமர்ஜென்சி டோர்".. கர்நாடக தேர்தலில் ஓரம்கட்டப்பட்ட எம்பி. தேஜஸ்வி சூர்யா.. என்ன நடந்தது? ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா ஓரம்கட்டப்பட்டு இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

Why did BJP young leader MP Tejaswi Surya not get a chance to be the star campaigner in Karnataka?

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சில நாட்களுக்கு முன் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. 10 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கடந்த வாரம் 23 பேரின் பெயர் கொண்ட இரண்டாம் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 6 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 16 எம் எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு 23 பேரின் பெயர் வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 6 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 16 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் பாஜகவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகர் சுதீப் கிச்சா பெயர் இதில் இடம்பெறவில்லை. அதேபோல் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பெயரும் இடம்பெறவில்லை.

பாஜகவின் எதிர்கால முகமாக, வளரும் இளம் தலைவராக பார்க்கப்பட்டவர் தேஜஸ்வி சூர்யா. ஆனால் அவர் ஏற்கனவே கர்நாடக தேர்தலில் பெரிய பங்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்தார். தேர்தல் தொடர்பான எந்த ஆலோசனையிலும் பெங்களூர் தெற்கு எம்பி தேஜஸ்வி கலந்து கொள்ளவில்லை.

Why did BJP young leader MP Tejaswi Surya not get a chance to be the star campaigner in Karnataka?

இந்த நிலையில்தான் அவர் ஸ்டார் வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் இவர் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த புகாரில் முதலில் பெயர்கள் வெளியிடப்படாத நிலையில், இதில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

இதனால் விமானத்தில் பயணம் செய்தது தேஜஸ்விதான் என்று உறுதி செய்யப்பட்டது. அதோடு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் தேஜஸ்வி அருகில் அமர்ந்து இருந்தது தெரிய வந்தது. அண்ணாமலையும் தேஜஸ்வியுடன் பயணம் செய்ததாக உறுதி செய்து உள்ளார்.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த விளக்கத்தில், கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சிறிய விமானத்தில் நாங்கள் பயணம் செய்தோம். தேஜஸ்வி சூர்யாவும் நானும் சென்றோம். அந்த விமானத்தில் முன்னாடி இருக்கும் 4 சீட் ஒன்றாக இருக்கும். தேஜஸ்வி எனக்கு முன்னால் இருக்கும் சீட்டில் இருந்தார். 10 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகத்தான் சென்றது. அவரை பார்க்க பலர் வந்தனர். அடுத்தடுத்து பலர் வந்தனர்.

இதனால் தேஜஸ்வி சூர்யா எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது தேஜஸ்வி சூர்யா என்னிடம் சொன்னார்.. இங்கே கதவு திறந்து இருப்பது போல சொன்னார். உடனே நாங்கள் புகார் அளித்தோம். பைலட் வந்து விசாரித்தார். என்ன நடந்தது என்று கேட்டார். தேஜஸ்வி அதற்கு, நான் ஜன்னலை அடஜஸ்ட் செய்தேன். அப்போது தவறுதலாக கைபட்டுவிட்டது. ஆனால் அதற்கே விமானத்தின் அவசர கதவு திறப்பது எல்லாம் இம்பாஸிபிள், என்று கூறினார்.

விமான விவகாரத்தில் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான தேஜஸ்வி தற்போது அங்கே நட்சத்திர பேச்சாளர் லிஸ்டிலும் ஓரம்கட்டப்பட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+