ஓ மை காட்.. குடிகார கணவனுக்கு.. கோழி வறுத்து தந்த மனைவி.. அடுத்த செகண்ட் கிச்சனில் நடந்த பயங்கரம்
சிக்கன் கபாப் ருசியாக இல்லாததல் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார் கணவர்
பெங்களூரு: சிக்கன் கபாப் ருசியாக இல்லை என்பதற்காக, குடிகார கணவன் செய்த காரியம், பெங்களூருவில் அதிர்ச்சியை தந்துவருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. ஆடி கிருத்திகை நாளில் மனைவி மீன்குழம்பு வைத்துள்ளார்...
கிருத்திகை அதுவுமா ஏன் மீன் குழம்பு வைத்தாய் என்று கேட்டு கணவர் தகராறு செய்துள்ளார்.. அந்த கோபத்தில் நேராக டாஸ்மாக்கில் நுழைந்து தண்ணி அடித்துவிட்டார்..
பிறகு மறுபடியும் போதையில் வீட்டுக்கு வந்து மனைவியை தாக்கி உள்ளார்.. இதில் மனைவி மயங்கி கீழ விழுந்துவிடவும், அவர் இறந்துவிட்டதாக நினைத்து, பயந்துபோன குடிகார கணவன் தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்..
அதேபோல, சேலத்திலும் ஒரு குடிகார கணவர் இப்படித்தான் செய்துள்ளார். வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு வரும்போது, மனைவிக்கும், குழந்தைகளுக்கும் பணியாரம் வாங்கி வந்துள்ளார்.. அந்த பணியாரம் ருசியாக இல்லை என தெரிகிறது..

பணியாரம்
இவ்வளவு விலை தந்து வாங்கியும், பணியாரம் ருசியாக இல்லை என்று மனைவி சொன்னாராம்.. அந்த ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றே விட்டார்.. சாப்பாடு விஷயம் கொலை, தற்கொலைகள் வரை செல்லும் விநோதங்களும் நம் நாட்டில் பெருகி வருகின்றன... அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.. பெங்களூருவில் பன்னேர்கட்டா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சுரேஷ்.. 48 வயதாகிறது.. மனைவி பெயர் ஷாலினி.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்...

கார்மெண்ட்ஸ்
கணவன் - மனைவி 2 பேரும், கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.. சம்பவத்தன்று 2 பேரும் பணியை முடித்து விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துள்ளனர்... பிறகு ஷாலினியிடம், "இன்னைக்கு நான் வீட்டிலேயே தண்ணி அடிக்க போகிறேன்.. எனக்கு சிக்கன் கபாப் செய்து தா" என்று கேட்டுள்ளார்.. அதற்காக சிக்கனும் வாங்கி வந்து ஷாலினியிடம் தந்துள்ளார்.. ஷாலினியும் சிக்கன் கபாப் சமைத்து தந்துள்ளார்.. அதை சாப்பிட்ட சுரேஷ், "இதென்ன சரியாக வறுபடவில்லையே.. டேஸ்ட்டும் காணோமே" என்று திட்டி உள்ளார்..

ஷாலினி
சிக்கன் டேஸ்ட்டாக இல்லை என்று சொன்னதுமே, இது வாக்குவாதமாக தம்பதிக்குள் வெடித்தது.. பிறகு கைகலப்பும் ஏற்பட்டது.. ஏற்கனவே போதையில் இருந்த சுரேஷ், இந்த சண்டையால் மேலும் ஆத்திரமடைந்து, கிச்சனுக்கு சென்று, கத்தியை எடுத்து மனைவியை குத்தி கடுமையாக தாக்கியுள்ளார்... இதில் ஷாலினி வலி பொறுக்க முடியாமல் அலறவும், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. இதெல்லாம் பார்த்த சுரேஷ், பயந்துபோய் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்..

டேஸ்ட் - கபாப்
அதற்குள் இது தொடர்பாக பன்னேர்கட்டா போலீசில் புகார் தரப்படவும், அவர்கள் வழக்கு பதிவு செய்து, சுரேஷிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், அதற்குள் வீட்டின் பக்கத்திலேயே மரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நிதானம் தவறியதுடன், பயம் காரணமாகவே, இந்த முடிவை எடுத்திருப்பார் என்று போலீசார் சொல்கிறார்கள்.. சுரேஷ்ஷின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... கத்திக்குத்து விழுந்த ஷாலினி சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை நடந்து வருகிறது.. ஷாலினியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications