காலையில் இருந்து சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தது ஏன்? குமாரசாமி மீதான புகார்.. பகீர் விளக்கம்!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் குமாரசாமி தனியார் ஹோட்டலில் காலையில் இருந்து தங்கி இருந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் குமாரசாமி தனியார் ஹோட்டலில் காலையில் இருந்து தங்கி இருந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக அமைக்கப்பட்டு இருக்கும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி முதல்வர் குமாரசாமி இன்னும் சில நிமிடங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருக்கிறார்.
அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. இதுதான் அங்கு ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் குமாரசாமி தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.

ஆனால்
ஆனால் ஒரு வாரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். இன்றும் அவர் அவைக்கு வராமல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விடமால் காலம் தாழ்த்தி வந்தார். இன்று மாலையே நம்பிக்கை நடத்த வேண்டும், சபாநாயகர் ரமேஷ் குமார் கூறிய பின்பும் கூட முதல்வர் குமாரசாமி அவைக்கு மதியம் வரை வரவில்லை.

வரவில்லை
முதல்வர் குமாரசாமி அவைக்கு வராமல் பெங்களூரில் இருக்கும் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் என்ற தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தார். அவரின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பாஜகவும் கிண்டல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
|
எங்கு
ஆட்சி கவிழும் நிலையில் முதல்வர் குமாரசாமி தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். ஆட்சியின் கடைசி நொடி வரை கூட அவர் மக்கள் வரி பணத்தை திருட நினைக்கிறார். கர்நாடக மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாஜக சார்பாக டிவிட் செய்யப்பட்டு இருந்தது.

என்ன புகார்
இந்த நிலையில் இந்த புகாருக்கு தற்போது குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நான் தங்கி இருந்தது உண்மைதான். சென்ற வருடம் அங்கு இருந்த போதுதான் சட்டசபை தேர்தல் முடிந்தது. தொங்கு சட்டசபை உருவான போது நான் அங்குதான் தங்கி இருந்தேன். அப்போதுதான் காங்கிரஸ் சார்பாக குலாம் நபி ஆசாத் போன் செய்து என்னை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இதுதான்
எனக்கு அப்போதுதான் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதனால் அந்த ஹோட்டல் எனக்கு ராசியான ஹோட்டலாக இருந்தது. இதனால்தான் அதே ஹோட்டலில் அதே அறையில் நான் இன்று தங்கி இருந்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது, என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications