ஹெலிகாப்டரை அனுப்புங்க.. களத்தில் குதித்த டிகே சிவக்குமார்.. கர்நாடக கடலோரத்திற்கு பறந்த டீம்.. ஏன்?
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மெஜாரிட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தனி மெஜாரிட்டியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் இவிஎம் வாக்கில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகள் முடிவடைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திர வாக்குகளில் இதுவரை 1 ரவுண்டு வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.ல்
பாஜக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் மெஜாரிட்டி: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மெஜாரிட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தனி மெஜாரிட்டியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் 2- 3 இடங்கள் மெஜாரிட்டிக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருந்தாலோ அங்கே காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் குழப்பங்கள் ஏற்படலாம். வலிமையான அரசை 5 ஆண்டுகள் அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
முக்கியமாக 2018 தேர்தலுக்கு பின் காங்கிரஸ் - மஜத அமைத்த ஆட்சி பாதியில் கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் இந்த முறை எம்எல்ஏக்களை பாஜக தூக்க கூடாது. குதிரை பேரம் நடக்க கூடாது. எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய கூடாது என்பது போன்ற விஷயங்களில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதையடுத்து எல்லா எம்எல்ஏக்களையும் பெங்களூருக்கு கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக காங்கிரஸ் டிகே சிவக்குமார் சார்பாக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு உள்ளது. முக்கியமாக கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களுக்கு டிகே சிவக்குமார் ஹெலிகாப்டரை அனுப்பி உள்ளார். எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு உள்ளவர்களை உடனே பெங்களூருக்கு வரும்படி அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதனால் அங்கே அடுத்த சில நாட்களுக்கு ரிசார்ட் கலாச்சாரம் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா அரசியல்: கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.
ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன.
கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications