இஸ்ரோவில் மோடி! பாஜக மாநில தலைவருக்கே இந்த நிலையா! மொத்தமா ஒதுக்கப்பட்ட லீடர்கள்! ஏன்? பரபர தகவல்
பெங்களூர்: பிரதமர் மோடி இன்று பெங்களூரில் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டினார். இந்த வேளையில் பாஜக மாநில தலைவர்கள் அனைவரும் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டனர். பிரதமர் மோடி பக்கம் அவர்கள் செல்ல முடியாத நிலையில் மக்களோடு மக்களாக அவர்கள் கையசைத்த சம்பவம் நடந்த நிலையில் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா நிலவு குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 1 மற்றம் சந்தரயான் 2 திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 1 என்பது நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது. சந்திரயான் 2 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்க முயன்ற இஸ்ரோவின் முயற்சி மயிரிழையில் தவறியது.

இதையடுத்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கம் செய்யும் வகையில் சந்திரயான்- 3 திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன்மூலம் இந்திய விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்தது. அதாவது நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு இந்தியா 4வது இடம் பிடித்தது. அதோடு நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்தது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தார். இதனால் அவரால் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை நேற்று முடித்த பிரதமர் மோடி நேரடியாக பெங்களூர் வந்து இறங்கினார். இதையடுத்து பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி சென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட சந்திரயான் 3 திட்டத்தின் விஞ்ஞானிகளை சந்தித்து நேரில் பாராட்டு தெரிவித்தார்.

இதற்காக பிரதமர் மோடி கிரீஸ் நாட்டில் இருந்து நேரடியாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வந்தார். அப்போது வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பொதுவாக பிரதமர் மோடி குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அந்த மாநில தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் அவரது காரின் பின்னால் செல்வார்கள்.
மேலும் பிரதமர் மோடியையும் பின்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஆனால் இன்று பெங்களூரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. பிரதமர் மோடியின் அருகே பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் அமைெச்சர்கள் அசோக், முனிரத்னா, கோபாலய்யா உள்பட பல முக்கிய தலைவர்கள் மக்களோடு மக்களாக நின்று பிரதமர் மோடியை பார்த்து கையசைத்தனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியான நிலையில் அதுபற்றிய விவாதம் கிளம்பியது.
இதுதொடர்பாக பாஜகவினர் கூறும்போது, ‛‛பிரதமர் மோடி இஸ்ரோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சந்திரயான் 3 வெற்றி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வெற்றி. இதில் கட்சி கொடி உள்பட கட்சி சார்ந்த நடவடிக்கைகள் இருக்க கூடாது என பிரதமர் மோடி விரும்பினார். இதனால் தலைவர்கள் மக்களோடு மக்களாக நின்றனர்'' என தெரிவித்தனர்.
ஆனால் காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‛‛கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி கர்நாடகா பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டாமல் விலகி உள்ளார்'' என்றனர். இதுதொடர்பாக தற்போது இணையதளங்களில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்னறர்.
முன்னதாக பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, ‛‛சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியபோது நான் இந்தியாவில் இல்லை. ஆனால் என்னுடைய மனம் முழுவதும் இங்குதான் இருந்தது. கடைசி 15 நிமிடம் பரபரப்பு தொற்றி கொண்டது. முதலில் இந்தியாவுக்கு போக வேண்டும். அதுவும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு போக வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றியது.இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது.
இதற்காக உங்களுக்கு சல்யூட் செய்கிறேன். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல கடந்த 2019ம் ஆண்டு சந்திராயன் 2 விழுந்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என்று அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை குறிப்பிடவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது'' என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications