"இட ஒதுக்கீடு அரசியல்!" கர்நாடகாவில் கரை சேருமா பாஜக.. ஆவேசமாக வரும் எதிர்க்கட்சிகள்! அடுத்து என்ன
பெங்களூர்: கர்நாடகாவில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பாஜக எடுக்கும் முடிவுகள் அங்குப் பேசுபொருளாகியுள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கே வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியாகப் போட்டி நிலவுகிறது. இது தவிர ஜேடிஎஸ் கட்சியும் களத்தில் உள்ளது. மேலும், ஆம் ஆத்மியும் இம்முறை களமிறங்குகிறது.

கர்நாடகா
கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 24ஆம் தேதி கர்நாடகாவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற அமைச்சரவை கூட்டம் நடந்தால் அதன் பிறகு அமைச்சர் ஒருவர் தான் செய்தியாளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்குவார். ஆனால், இந்த முறை பசவராஜ் பொம்மையே நேரடியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு நடந்த அந்த கடைசி கூட்டத்தில் இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பசவராஜ் பொம்மை
இதில் இட ஒதுக்கீடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஓபிசி இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இது மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய சமூகமான லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கா வாக்குகளைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட சட்டமாகப் பார்க்கப்படுகிறது. அப்போது பசவராஜ் பொம்மை கூறிய கருத்துகளும் முக்கியத்துவம் பெற்றது. அதாவது 20, 30 ஆண்டுகளாக அரசு இந்த விவகாரத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததாகவும் காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், கர்நாடக அரசின் முடிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்லாமியர்கள்
அங்கே இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதை ரத்து செய்துவிட்டே இப்போது லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் உடனடியாக கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாகக் காங்கிரஸ், ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு சமூகங்களைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று அவர்கள் சாடியுள்ளனர். இருப்பினும், பாஜக அதற்குப் பதிலளிக்கவில்லை.

என்ன காரணம்
முன்னதாக கடந்த டிசம்பரில், லிங்காயத் சமூகத்தின் பஞ்சமஷாலி பிரிவினர் 15 சதவீத இட ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில் தான் லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் இரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முடிவெடுத்துள்ளனர். இது தவிரப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் அறிவித்துள்ளனர். ஆனால், இதற்கு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்தாகியுள்ளது தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுவிற்கு மாற்றியுள்ளனர்.

அதிகாரமே இல்லை
ஆந்திரப் பிரதேசத்தில் மதச் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததையும் தங்கள் தரப்பிற்கான வாதமாகக் குறிப்பிடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான வரம்பு இருக்கும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாது என்றும் எந்த வருமானம் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இருப்பினும், இதை அங்குள்ள ஓபிசி பிரிவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதுபோன்ற விவகாரங்களில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் கமிஷன் அளிக்கும் பரிந்துரை அடிப்படையிலேயே அரசால் முடிவெடுக்க முடியும் என்பது அவர்கள் வாதம்.

அமித் ஷா
இருப்பினும், கர்நாடக அரசின் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். முந்தைய அரசுகள் வாக்கு வங்கியை மனதில் வைத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் இருப்பினும் இப்போதைய அரசு துணிச்சலாக அதை நீக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும், சமூக ரீதியாகப் பின்தங்கி இருப்பதைக் கருத்தில் கொண்டு கர்நாடகா மைசூர் சமஸ்தானமாக இருந்த போதே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கர்நாடக அரசின் நடவடிக்கை தவறானது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

சுற்றி வளைக்கும் எதிர்க்கட்சிகள்
இது குறித்து ஜேடிஎஸ் கட்சியின் இப்ராஹிம் கூறுகையில், "இது நீதிமன்றத்தில் நிற்காது. அரசு ஏன் இரு வேறு சமூகத்திற்கும் இடையே பகைமையை ஏற்படுத்துகிறது" என்று விமர்சித்துள்ளார். அதேபோல கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவக்குமார், "எங்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு எல்லாம் தேவையில்லை.. லிங்காயத்துகளும் வொக்கலிகாக்களும் பிச்சைக்காரர்கள் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நடவடிக்கையை ரத்து செய்வோம்" என்று ஆவேசமாகப் பேசினார்.

உதவுமா
ஆனால், இட ஒதுக்கீடு மறுசீரமைப்பு செய்துள்ளது வரும் காலத்தில் தங்கள் தேர்தலில் வெற்றிக்கு உதவும் என்று பாஜக நம்புகிறது. இருப்பினும், எஸ்சி குழுக்களுக்கான உள் இட ஒதுக்கீடுகள் சிவமொக்கா மற்றும் பாகல்கோட்டில் பாஜகவுக்கு எதிராகப் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. இதனால் இந்த இட ஒதுக்கீடு முடிவு பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் பாதகமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளத் தேர்தல் முடிவுகள் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications