பெங்களூர் நட்சத்திர ஓட்டலில்.. தோழியுடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலன்.. பெண் எடுத்த விபரீத முடிவு
பெங்களூர்: பெங்களூரில் தனியார் நட்சத்திர ஓட்டலில், கள்ளக்காதலன் தனது தோழியுடன் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த யசோதா என்ற பெண், விபரீத முடிவெடுத்துள்ளார். தான் அறிமுகம் செய்து வைத்த தோழியே தனது கள்ளக்காதலனை அபகரித்து ஓட்டலுக்கு அழைத்து சென்றதால், மனம் நொந்து இந்த முடிவை எடுத்துள்ளார் யசோதா.
தனது தோழியை கள்ளக்காதலனுக்கு அறிமுகம் செய்து வைத்த பிறகு, யசோதாவிடம் அவர் சரியாக பேசவில்லை என்றும், சம்பவத்தன்று ஓட்டலில் இருவரும் கையும் களவுமாக சிக்கியதும், கள்ளக்காதலன் தன்னுடன் வர மறுத்ததும், மன வேதனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து யசோதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து 2 குழந்தைகள்
பெங்களூர் மாகடி ரோடு காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் யசோதா. அவருக்கு திருமணம் முடிந்த நிலையில், கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இருப்பினும், அதே பகுதியை சேர்ந்த ஆடிட்டர் விஸ்வநாத் என்பவருடன் யசோதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
முதலில் நண்பர்களாக இருந்த நிலையில், அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக கணவன் மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில், யசோதா தனது தோழி பிரியங்காவைக் விஸ்வநாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பிரியங்காவுடன் கள்ளக்காதல்
பிரியங்காவை அறிமுகம் செய்த நாளிலிருந்து, விஸ்வநாத்தின் கவனம் முழுக்க பிரியங்காவிடம் சென்றுவிட்டது. அவர் பிரியங்காவின் செல்போன் எண்ணை வாங்கி, தொடர்ந்து பேசிவந்துள்ளார். பிரியங்காவும் விஸ்வநாத்தின் பேச்சில் மயங்கி, அவரிடம் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். இதனால் விஸ்வநாத், யசோதாவிடம் பேசுவதை படிப்படியாக நிறுத்தியுள்ளார். அதே சமயம், பிரியங்காவுடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளார்.
இதனால் யசோதாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அவர் போன் செய்தாலும், விஸ்வநாத் எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. யசோதா, பிரியங்காவின் நடத்தை பற்றி சந்தேகமடைந்து, அவரை தொடர்ந்து கண்காணித்துள்ளார். இதன்மூலம், பிரியங்காவுக்கும் விஸ்வநாத்திற்கும் கள்ளக்காதல் உறவு இருப்பது உறுதியானது.
தோழியுடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலன்
இதனால் மனம் புண்பட்ட யசோதா, தனது தோழி பிரியங்காவுடனான நட்பை கைவிடக் கூறி, விஸ்வநாத்துடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று, விஸ்வநாத் மற்றும் பிரியங்கா பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதை எப்படியோ அறிந்த யசோதா, அந்த ஓட்டலுக்கு நேராக சென்றுள்ளார்.
அங்கு சென்று இருவரிடமும் வாக்குவாதம் செய்து, கடுமையாக சண்டையிட்டுள்ளார். ஓட்டலில் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்ததும், மனம் நொந்துபோயுள்ளார். பிரியங்காவிடம் இதுபற்றி கேட்டபோது சரியாக பதிலளிக்காததால், இருவரையும் சாடியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கதவை உள்புறமாக பூட்டினார்
பின்னர் மன விரக்தியடைந்த யசோதா, அருகில் உள்ள ஓட்டல் அறைக்குச் சென்று, கதவை உள்ளே இருந்து பூட்டிக்கொண்டார். அதன்பின், அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யசோதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கான வழக்கை பதிவு செய்த போலீசார், விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications