"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக
சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் . தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
நிதியமைச்சர் மரியவில்சன் திமுக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், "பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை!

அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள்.
தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம்.
கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா?
எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள்.
அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான்.
எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்!"இவ்வாறு திமுக ஐடி விங்க் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்!














Click it and Unblock the Notifications