உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சென்னை ஐஐடி! பெங்களூர் ஏரோ இந்தியாவில்.. "ஏர் டாக்ஸி.!" அடடே
ஏரோ இந்தியா 2023இல் சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் உருவாக்கிய ப்ரோடோடைப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் உலகின் பல அதிநவீன விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இருப்பினும், அனைத்தையும் தாண்டி சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் உருவாக்கிய ப்ரோடோடைப் மாதிரி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த வாரம் ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சி நடைபெற்றது.. பிரதமர் நரேந்திர மோடி வைத்த இந்த ஏரோ ஸ்பேஸ் கண்காட்சியில் பல முக்கிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் காட்சியான இந்த கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.. இந்தாண்டு 'The runway to a billion opportunities' என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

ஏரோ இந்தியா
இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நவீனத் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை தரும்.. பெங்களூர் யெலஹங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிநவீன விமானங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. 100 வெளிநாட்டு நிறுவனங்கள், 700 இந்திய நிறுவனங்கள் என மொத்தம் 800 பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

சென்னை ஐஐடி
அமெரிக்காவின் மிக நவீனமான எஃப்-35 போர் விமானங்கள் முதல்முறையாக இந்த கண்காட்சிக்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இப்படி உலகின் பல அதிநவீன விமானங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. இருப்பினும், அனைத்தையும் காட்டிலும் சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் உருவாக்கிய ப்ரோடோடைப் மாதிரி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சென்னை ஐஐடியை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் அதன் பறக்கும் டாக்ஸி மாடலை ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தியது. மின்சாரத்தில் இயங்கும் இந்த பறக்கும் டாக்ஸி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஏர் டாக்ஸி
இந்த பறக்கும் டாக்ஸியால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்ல முடியும். e200 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்ஸி மூலம் 10 மடங்கு வேகத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியும். மேலும், இந்த ஏர் டாக்ஸியால் நிற்கும் இடத்தில் இருந்தே செங்குத்தாகக் கிளம்பவும் தரையிறங்கவும் முடியும்.. விமானத்தைப் போல இதற்கு ஓடுபாதை எதுவும் தேவையில்லை. ஹெலிகாப்டர் போல ஒரே இடத்தில் இருந்து கிளம்பும் இறங்கும்.

பறக்கும் டாக்ஸி
பெங்களூரில் நடந்த இந்த ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பறக்கும் டாக்ஸியின் படங்கள் இணையத்தில் பலரும் பகிர்ந்துள்ளனர். இப்போது சோதனை அடிப்படையிலேயே இந்த பறக்கும் டாக்ஸி மாடலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முறையான சோதனை மற்றும் அனுமதி எல்லாம் கிடைத்து இந்த பறக்கும் டாக்ஸி பயன்பாட்டிற்கு வர சில ஆண்டுகளாவது ஆகிவிடும். இருப்பினும், அப்போதும் பறக்கும் டாக்ஸி மக்கள் பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சென்னை உள்ளிட்ட நெருக்கடியான நகரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை நிறுவனம்
சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர் பிரஞ்சல் மேத்தா ஆகியோர் இணைந்து இந்த ePlane நிறுவனத்தைக் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கினர்.e200 என்று அழைக்கப்படும் இந்த மின்சார வாகனத்தில் சரக்கு மற்றும் பயணிகள் சேவையை என்று இரண்டையும் செய்ய முடியும். இந்த ஏர் டாக்ஸி ஒரு பெரிய கார் அளவுக்கு மட்டுமே இருக்கும். இதன் மூலம் மிக வேகமாக நகரங்களில் கூட செல்ல முடியும்.

நோக்கம்
இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த ஏர் டாக்ஸி மூலம், குறைந்த விலையில் நெருக்கடியைத் தாண்டி நகரங்களில் பயணம் செய்ய முடியும்.. இந்த விமானம் இரண்டு ப்ரொப்பல்லர் செட்களை கொண்ட இந்த விமானத்தில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாகவே உள்ளது. மின்சார வாகனங்களுக்கான வழக்கமான சார்ஜிங் முறைகளைப் பயன்படுத்தி இந்த விமானத்தை சார்ஜ் செய்யலாம். அதுமட்டுமின்றி ஃபிளாஷ் சார்ஜிங் முறையிலும் இதை சார்ஜ் செய்யலாம்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications