ஆட்சி அமைத்தும் சிக்கல்.. அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் திணறும் எடியூரப்பா.. நெருக்கடி!
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார்.
பெங்களூர்: கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார்.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.
திங்கள் அன்று வாரம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஆனால் என்ன
ஆனால் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார். முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனால் யாரை அமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக தரப்பு கர்நாடகாவில் குழம்பி வருகிறது.

இல்லை
ஆட்சியில் அமர்ந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு அமைச்சர் கூட எடியூரப்பா ஆட்சியில் பதவி ஏற்கவில்லை. தற்போது வரை எடியூரப்பா மட்டுமே அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். வேறு யாரும் பதவி ஏற்கவில்லை. இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

என்ன காரணம்
தற்போது பாஜகவிற்கு கர்நாடகாவில் 105 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள். அங்கு பெரும்பான்மை பெற 104 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் உருவாக கூடாது என்பதால், பாஜக அரசு அமைச்சரவையை மிகவும் கவனமாக தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது. யாரும் விலகிவிடாத படி அமைச்சரவையை உருவாக்க பாஜக நினைத்து வருகிறது.

நெருக்கடி
ஆனால் பாஜக தேசிய தலைமை எடியூரப்பாவிற்கு உடனடியாக அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் அவர் கடும் அழுத்தத்தில் உள்ளார். அது மட்டுமில்லாமல் மஜத, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எடியூரப்பாவிடம் அமைச்சரவை எங்கே என்று நெருக்கடி கொடுத்து வருகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications