யெஸ் வங்கி திவால் பிரச்சனை... ஒருநாள் முழுவதும் முடங்கியது ‘போன்பே’
பெங்களூரு: யெஸ் வங்கியின் திவால் பிரச்னை காரணமாக ஒரு நாள் முழுவதும் போன்பே நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் முடங்கியது. ஆனால், ஒரே நாளில் பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டதாக போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.
Recommended Video
ஆரம்பித்த குறுகிய காலத்தில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக மாறியது யெஸ் வங்கி. இந்த வங்கி 2004.ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கி கடன் வழங்கும் விவகாரத்தில் வித்தியாசமான முறையை கையாண்டது.
அதாவது கடன் தருவதற்கு மற்ற வங்கிகள் தயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு கூட தைரியமாக கடன் வழங்கியது. பொருளாதாரம் வளர வளர இந்த நிறுவனத்திற்கு கடன் திரும்பி வர ஆரம்பித்தது. ஆனால் பொருளாதாரம் மந்த நிலை அடைந்த காரணத்தால் பலரும் கடனை கட்டாமல் விட்டடனர்.

50 ஆயிரம் வரை கட்டுப்பாடு
இதனால் வாராக்கடன் அதிகரித்தது. பல நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திவால் நிலைக்கு சென்றது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திற்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி, அந்த வங்கியை சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதித்துள்ளது.

நாள் முழுவதும் பாதிப்பு
இந்நிலையில் யெஸ் வங்கியின் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி செயல்பட முடியாமல் முடங்கிவிட்டதால் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையில் யெஸ் வங்கியுடன் இணைந்து செயல்பட்ட போன்பே நிறுவனம் முற்றிலும் முடங்கியது. இந்த பாதிப்பு ஒரு நாள் முழுவதும் நீடித்தது. அதன் பின்னர் பிரச்னை தீர்ந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது என போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணப்பரிவர்த்தனை
இந்தியாவில் மிகப் பெரிய பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான போன் பே. ஆன்லைன் வழியாக பரிமாற்றம் செய்யப்படும் பணம் அனைத்துமே, யெஸ் வங்கியை நம்பித்தான் இருக்கிறது. இதனால் , போன் பே நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாமல் ஒரு நாள் முழுவதும் தவித்தார்கள்
|
சரியாகி விட்டது
போன் பே நிறுவனத்தின் பணப் பரிமாற்றங்களும் க்ளியர் ஆகாமல் தேங்கி நின்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த போன்பே வாடிக்கையாளர்கள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அதற்கு அந்நிறுவனம் டுவிட்டரில், 'நாங்கள் ஒரு திட்டமிடாத பராமரிப்பு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த பராமரிப்பு பணிகளினால், உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். விரைவில் எங்கள் சேவை தொடங்கும்' என கூறியது. இந்நிலையில், நேற்று காலையில் போன் பே நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் பணப் பரிவர்த்தனை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவித்தது அத்துடன் குறுகிய காலத்தில் பார்ட்னராக மாறிய ஐசிஐசிஐ வங்கி மற்றும் உதவிய நேஷனல் பேமண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு நன்றி என்று இந்நிறுவனத்தின் சிஇஒ கூறினார். அதன்பிறகே வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications