For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ச்சூன் டாப் 50 சி.இ.ஓக்கள் பட்டியலில் இடம்பிடித்த சத்யா நதெள்ளா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நதெள்ளா பார்ச்சூன் வர்த்தக இதழின் டாப் 50 லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். அவரைப்போல இந்தியா வம்சாவழியை சேர்ந்த மற்ற இரண்டு சி.இ.ஓக்களும் இந்த இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் தொழில் துறையின் பல்வேறு சிறப்புகளை, அமெரிக்காவில் வெளியாகும் பார்ச்சூன் இதழ் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் டாப் 50 சி.இ.ஓக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனத்தின் அரசியல் சூழ்ச்சிகளை அனாயாசமாக கையாண்டு நிறுவனத்தின் ஊழியர்களையும் திறமையாக தன் கை பிடிக்குள் வைத்திருக்க தனி திறமை வேண்டும். தலைமைச் செயல் அதிகாரிகள் திறமையானவர்களாக அமைந்துவிட்டால், அந்த நிறுவனத்தின் தலைவருக்கு தலைவலியே இல்லை என்பார்கள். சில நிறுவனங்களில் நிறுவனரே தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் செயல்படுவார்.

அத்தகைய திறமை வாய்ந்த சி.இ.ஓக்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த டாப் சி.இ.ஓக்கள் பட்டியலில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த சி.இ.ஓக்கள் இடம்பெற்றுள்ளனர். நிறுவனத்தில் அவர்கள் செய்த சாதனைக்காகவே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சத்யா நாதெள்ளா

சத்யா நாதெள்ளா

இதில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ லாரிபேஜ் முதலிடம் பிடித்துள்ளார். மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் சி.இ.ஓ அஜய் பங்கா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா,ஹார்மென் இண்டர்நேசனல் சி.இ.ஓ தினேஷ் பாலிவால் ஆகியோர் இந்த டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இதில் அஜய் பங்கா 28 வது இடத்திலும், நாதெள்ளா 38 வது இடத்திலும் பாலிவால் 42 இடத்திலும் உள்ளனர்.

அஜய் பங்கா

அஜய் பங்கா

சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு வந்த தலைமைச் செயல் அதிகாரி என்று பங்காவைப் பற்றி புகழாரம் சூட்டியுள்ளது பார்ச்சூன் இதழ்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர்களின் திருப்தி, செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி என பல சிறப்பு மிக்க பணிகளை ஆற்றியுள்ளார் பங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாதெள்ளா எப்படி?

நாதெள்ளா எப்படி?

எளிமையான,ஒல்லியான அதேசமயம் பேஷனான சி.இ.ஓ என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நாதெள்ளாவிற்கு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. நாதெள்ளா பொறுப்பேற்ற முதலாண்டிலேயே சிறப்புமிக்க பல பணிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு ஆற்றியுள்ளார்.

டார்லிங் தினேஷ் பாலிவால்

டார்லிங் தினேஷ் பாலிவால்

அதேபோல ஹார்மென் இண்டர்நேசனல் சி.இ.ஓ தினேஷ் பாலிவால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து இந்த பதவியில் இருக்கிறார். அவரது திறமையின் நிறுவனத்தின் வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம். வால் ஸ்ட்ரீட்டின் டார்லிங் என்று வர்ணிக்கின்றனர் பிரபல அனலிஸ்டுகள்.

மார்க் ஜூகர்பெர்க்

மார்க் ஜூகர்பெர்க்

இந்த பட்டியலில் வால்ட் டிஸ்னியின் சி.இ.ஓ பாப் ஐகர் 6வது இடத்தில் இருக்கிறார். அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா 10 வது இடத்திலும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 13 வது இடத்திலும் தெல்சா நிறுவனத்தின் சி.இ.ஓ எலன் மஸ்க் 18 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

வாரன் பப்பெட்

வாரன் பப்பெட்

அமேசான் நிறுவன சி.இ.ஓ ஜெஃப் பெஜோஸ் 25 வது இடத்திலும் உள்ளனர். பெர்க்க்ஷையர் ஹாத்வே சேர்மனும் சி.இ.ஓவுமான வாரன் பப்பெட் இந்த பட்டியலில் 34 வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three leading India-born CEOs, including Microsoft's Satya Nadella, who took their companies "full speed ahead" have featured in Fortune's Businessperson of the Year list topped by Google CEO Larry Page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X