சம்பள உயர்வு வந்தாச்சு.. ஆனா பாதி மட்டும் கையில்! — Accenture அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!
IT துறையில் சம்பள உயர்வு என்றாலே ஊழியர்களுக்கு உற்சாகம். ஆனால் உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான Accenture தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய சம்பள உயர்வு முறை, பல ஊழியர்களிடம் ஆச்சரியத்தையும், சிலரிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சம்பள உயர்வின் பாதி மட்டும் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு, மீதமுள்ள பாதி ஒற்றை முறை பேமெண்ட் ஆக வழங்கப்படும் தொகையாக (lump sum) அளிக்க திட்டமிட்டு உள்ளது, பெரிய விவாதமாக மாறியுள்ளது.

7.8 லட்ச ஊழியர்களுக்கு மெமோ..
உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் (Accenture), தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றம், உலகம் முழுவதும் உள்ள தனது 7.8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய அமைப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வில் 50% ஒரு முறை பணமாக (lump sum) வழங்கப்படும், மீதமுள்ள 50% அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும்.
அக்சென்சர் சம்பள உயர்வு முறையில் மாற்றம்
அக்சென்சர் நிறுவனம், ஜூன் மாத சம்பள உயர்வு சுழற்சிக்காக தனது சம்பள உயர்வு கட்டமைப்பை திருத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்களுக்கு தங்களுடைய சம்பள உயர்வில் பெரும் பகுதி உடனடியாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஒட்டுமொத்த சம்பளச் செலவையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய மாற்றம் எடுக்கப்பட்டுள்ளதாக தெகிலித்துள்ளது.
இந்தப் புதிய முறைப்படி, ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வில் பாதி பகுதி ஜூன் மாதத்தில் ஒரு முறை பணமாக வழங்கப்படும். மீதமுள்ள பாதி, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் நிரந்தரமாக சேர்க்கப்படும்.
50% ஒரு முறை பணமாக, 50% அடிப்படை சம்பளத்தில்
உதாரணமாக, ஒரு ஊழியருக்கு 10% சம்பள உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், அதில் 5% அவரது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். மீதமுள்ள 5% ஜூன் மாதத்தில் ஒரு முறை பணமாக (lump sum) வழங்கப்படும். இந்த முறை, ஊழியர்களுக்கு உடனடி நிதி ஆதாரத்தை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த ஒரு முறை பணம், டிசம்பர் மாதம் வழங்கப்படும் வருடாந்திர போனஸிலிருந்து தனியாக இருக்கும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏன் இந்த புதிய முறை?
இந்த மாற்றத்திற்கான நோக்கம் குறித்து Accenture விளக்கம் அளித்துள்ளது. ஊழியர்களுக்கு உடனடி பணப் பலன் கிடைக்கச் செய்வதோடு, நிறுவனத்தின் மொத்த ஊதியச் செலவையும் கட்டுப்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு - சம்பள உயர்வு தொகை என்னாகும்?
பதவி உயர்வு காரணமாக அளிக்கப்படும் சம்பள உயர்வு முழுவதும் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அக்சென்சர் தெரிவித்துள்ளது. இது, பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு நிரந்தரமான சம்பள உயர்வை உறுதி செய்யும்.
குழப்பத்தில் ஊழியர்கள்
அக்சென்சரின் இந்தப் புதிய சம்பள உயர்வு முறை, ஊழியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ஊழியர்களிடையே கலவையான எதிர்வினைகள் வெளியாகியுள்ளன. சிலர், கையில் உடனடி பணம் கிடைப்பது நல்லது என்று வரவேற்கிறார்கள்.
ஆனால் மற்றவர்கள், ஒருமுறை வழங்கப்படும் தொகைக்கு வரி எவ்வாறு கணக்கிடப்படும்? இது இந்த ஆண்டுக்கு மட்டும் தானா? அல்லது இனி நிரந்தர முறைமையா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.














Click it and Unblock the Notifications