ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வருகிறது ஏர்டெல்லின் வோல்ட்டி 4ஜி

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், புதிதாக ரிலையன்ஸின் ஜியோவிற்கு போட்டியாக 4ஜி நெட்வொர்க் சேவையை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் முன்னனி தனியார் துறை தொலைபேசி மற்றும் மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் நாட்டின் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவையை அளித்து வருகின்றது.

வாடிக்கையாளர்களின் குறைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்துவருகின்றது. இதனாலேயே, பெரும்பாலான பிஎஸ்என்ல்லின் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களாக மாறிவிட்டனர்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இந்த நிலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி அன்று ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தும்வரைதான். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு நிலைமை தலைகீழாக மாறியது.

4ஜி இணையதள வசதி

4ஜி இணையதள வசதி

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் அதிவேக 4ஜி இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஜியோ சேவையில் சந்தாதாரராக இணைபவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் அளிக்கப்பட்டது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கூடுதலாக கடந்த மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன வருடாந்திர கூட்டத்தில் பேசிய அதன் தலைவரான முகேஷ் அம்பானி, வெகு விரைவில் நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக மொபைல் ஃபோன் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

மொபைல் நிறுவனங்களுக்கு இழப்பு

மொபைல் நிறுவனங்களுக்கு இழப்பு

இந்த தடாலடி அறிமுக சலுகையால், ஏர்டெல் மற்றும் பிற மொபைல் சேவைகளைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலான சந்தாதாரர்கள் தங்களின் இணைப்புகளை துண்டித்துக்கொண்டு ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களாக மாற்றிக்கொண்டனர். இதனால் பிற மொபைல் சேவை நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்திக்க நேர்ந்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் சரிவு

ஏர்டெல் நிறுவனத்தின் சரிவு

ஏர்டெல் நிறுவனத்தின் கடந்த ஜூன் மாதத்திய காலாண்டு முடிவில், லாப அளவு சுமார் 367 கோடி ரூபாய் குறைந்தது. ஆனால், கடந்த ஆண்டின் இதே காலாண்டு முடிவில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 1,462 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸி நிறுவனத்தின் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய 4ஜி இணையதள சேவை

புதிய 4ஜி இணையதள சேவை

இதனை உணர்ந்த ஏர்டெல் நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மொபைல் மற்றும் இணையதள சேவையை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகவே ஏர்டெல் நிறுவனம் புதியதாக 4ஜி இணையசேவையை (VoLTE) வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

ஜியோ இலவச மொபைல் போன்

ஜியோ இலவச மொபைல் போன்

இதன்மூலம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட இலவச மொபைல் ஃபோன் என்ற அறிவிப்பிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி இணையதள சேவையை அளிக்கும் கோதாவில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்களின் 4ஜி வோல்டி சேவையை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மொபைல் ஃபோன்களை தயாரிக்குமாறு மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bharti Airtel Ltd plans to take on Reliance Jio Infocomm Ltd by launching its own VoLTE (a 4G voice network) service by March 2018.
Please Wait while comments are loading...