தங்கம் & வெள்ளி.. "அப்படியே ஓடிடுங்க.." திடீரென டோனை மாற்றிய ஆனந்த் சீனிவாசன்.. ரொம்ப முக்கியம்!
சென்னை: தங்கம் விலை ஒரு பக்கம் நிதானமாக இருக்கவே.. இன்னொரு பக்கம் வெள்ளி விலை தாறுமாறாகச் சரிய ஆரம்பித்துவிட்டது. இதனால் மக்கள் எதில் முதலீடு செய்யலாம்.. எப்போது முதலீடு செய்யலாம் என எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் முதல் மாதமே தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத விலைக்குப் போனது. ஆனால், அதன் பிறகு சட்டென சரிந்த தங்கம் இப்போது ரூ.14000 ரேஞ்சிலேயே இருக்கிறது. ஒரு நாள் ஏறினால் மறுநாள் இறங்குவது என்றே மாறி மாறி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
அதாவது வரும் காலத்தில் ஏறும் எனத் தெரிந்தால் இப்போதே வாங்கலாம்.. அல்லது குறையும் எனத் தெரிந்தால் காத்திருக்கலாம்.! இரண்டும் இல்லாமல் ஏற்ற இறக்கம் என மாறி மாறி வருவதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் மற்றும் வெள்ளி மார்கெட்டில் இப்போது என்ன நடக்கிறது என்பது தொடர்பாகச் சில நாட்களுக்கு முன்பு பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் விளக்கமளித்துள்ளார்.
தங்கம்- வெயிட் அண்ட் வாட்ச்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் ஒரு நாள் ஏற்றம், மற்றொரு நாள் இறக்கம் என்றே இருக்கிறது. சர்வதேச சந்தையிலும் இதே தான் நிலைமையாக இருக்கிறது. இன்றைய சூழலில் தங்கம் கண்டிப்பாக வேண்டும் என்றால் மட்டும் வாங்குங்கள். இல்லையென்றால் வெயிட் அண்ட் வாட்ச்.. சீனா என்ன செய்கிறது என்ற டேட்டா வெளியே வந்த பிறகே நாம் முடிவெடுக்க முடியும்.
இப்போது 22 காரட் தங்கம் விலை ரூ.14000- 14,5000 என்ற ரேஞ்சில் இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மிக பெரியளவில் ஏற்றம், இறக்கத்தைச் சந்தித்து வருவதால் தங்க நகைக்கடைக்காரர்கள் போடும் விலை எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.
வெள்ளி- ஓடிடுங்க
மறுபுறம் வெள்ளி விலையைச் சர்வதேச சந்தையில் 75 டாலருக்கு கொண்டு வந்துவிட்டார்கள். எங்கு ஆரம்பித்தார்களோ அதே இடத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள். 120 டாலரில் இருந்து 75 டாலருக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 40 முதல் 50% சரிந்துள்ளது. இப்போது 50% ஏறினால் கூட 120 டாலர் போகாது. 107 டாலர் தான் போக முடியும். 70% ஏறினால் மட்டுமே முந்தைய உச்சத்தைத் தொடும்.
இந்தியாவில் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வெள்ளி விலையைக் காட்டிலும் உண்மையான விலை குறைவாகவே இருக்கிறது. நீங்கள் விற்கும் விலையானது அதை விடவும் குறைவாகவே இருக்கும். முடிந்தவரை வெள்ளியை விற்றுவிட்டு ஓடிவிடுங்கள். நான் செய்வதே சரி எனப் பிடிவாதம் வேண்டாம். எல்லாரும் வாழ்க்கையில் தவறு செய்வோம். யானைக்கும் அடி சறுக்கும்! எனவே, இதை பெர்சனலாக எடுத்துக் கொள்ளாமல் பாடமாக எடுத்துக் கொள்ளவும். இதில் பாடத்தை கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
வித்தியாசம் இருக்கு!
ஒரு மானிட்டரி மெட்டலுக்கும் ஒரு இண்டஸ்ட்ரியல் மெட்டலுக்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் மீண்டும் இதை தவறை தான் செய்வோம்" என்றார். மேலும், மற்றொரு வீடியோவிலும் வெள்ளி விலை மேலும் சரியவே வாய்ப்புகள் அதிகம் என்பதை மீண்டும் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தங்கம் விலை காலி.. 1983க்குப் பிறகு நடக்காத மிகப்பெரிய சம்பவம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்! -
நகை கடன் தள்ளுபடி ரெடி? முக்கோணம் எடுக்கும் கோல்டு லோன் வாக்குறுதி.. ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications