தொடர்ந்து 5 நாட்கள் லீவு… பேங்க் வேலைகளை இன்றே முடித்துக் கொள்ளுங்கள்
சென்னை: தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் நாளையில் இருந்து வங்கிகள் 5 நாட்களுக்கு இயங்காது. இதனால் வங்கியில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை இன்றே முடித்துவிடுவது நல்லது.

நாளை 2வது சனி. ஞாயிறன்று வழக்கமான விடுமுறை. திங்கள் கிழமை ஆயுதபூஜை, செவ்வாயன்று விஜயதசமி, புதன்கிழமையான 12ம் தேதி மொகரம். ஆக, தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கி தொடர்பான பணிகளை இன்றே மேற்கொள்ள வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களும் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8000 வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றங்கள் உள்ளிட்ட எந்த வங்கி சேவையும் இந்த 5 நாட்களுக்கு நடைபெறாது. ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படுவதை பொறுத்துதான் அதன் செயல்பாடும் இருக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை இன்றே முடித்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications
