17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்.. 3 மாதங்களில் ₹262 கோடி லாபம்! சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த 17 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதற்கிடையே இப்போது முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனம் ₹262 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் டெலிகாம் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தன. ஆனால், ஜியோ வருகைக்குப் பிறகு பல நிறுவனங்கள் திவால் ஆகின.

business BSNL

டெலிகாம்:

இப்போது 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் உள்ளன. இது தவிர அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்கி வந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தைக் குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன.

17 ஆண்டுகளுக்குப் பின் லாபம்:

அதற்கு இப்போது தான் பலன் கிடைத்துள்ளது. 2024-2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டுவதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கடைசியாக 2007ம் ஆண்டில் லாபம் ஈட்டி இருந்தது. அதன் பிறகு அது தொடர்ச்சியாக நஷ்டத்திலேயே இயங்கி வந்த நிலையில், இப்போது சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்தை ஈட்டியுள்ளது. நெட்வொர்க் விரிவாக்கம், செலவுகளைக் குறைப்பது, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான திட்டங்கள் ஆகியவை காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்டியுள்ளது

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் ஏ ராபர்ட் ஜே.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த காலாண்டில் எங்களின் செயல்திறன் மகிழ்ச்சியைத் தருகிறது.. இது புதுமை, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் தீவிரமான நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தியதால் கிடைத்த பரிசு.. வரும் காலங்களில் வருவாய் வளர்ச்சி மேலும் இருக்கும் என்றே நினைக்கிறோம். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் வருவாய் மேலும் 20%க்கும் உயரும் என்றே எதிர்பார்க்கிறோம்.

பிஎஸ்என்எல் வருவாய் உயர்வு:

மொபிலிட்டி வருவாய் 15%, எஃப்டிடிஹெச் வருவாய் 18%, லீஸ் வருவாய் 14% அதிகரித்துள்ளது. மேலும், நாங்கள் எங்கள் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளோம். கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் எங்கள் செலவு ரூ.1800 கோடி வரை குறைந்துள்ளது. மேலும், நேஷனல் வைஃபை ரோமிங், BiTV மற்றும் FTTH வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் எனப் பல திட்டங்களை வழங்கினோம். இவை அனைத்தும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரும்பத் தொடங்கியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி அதிகரித்தது:

பல்வேறு பிரிவுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரைப் பல ஆண்டுகளாகவே 4ஜி சேவை இல்லை என்ற குறை இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த ரேட்டில் 4ஜி கிடைப்பதால் பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் குறிப்பாக மொபைல் சேவைகள் பிரிவில் முந்தைய ஆண்டை விட வருவாய் 15% அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்தே பிஎஸ்என்எல் நிறுவனம் லாபமடையக் காரணமாக இருக்கிறது. அதேநேரம் இப்போது கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், பிஎஸ்என்எல் அதையும் கொண்டு வந்துவிட்டால் அதன் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது என்றே கூறுகிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+